சமையலறைக்குள் கருப்பு பைகளுடன் நிர்வாணமாக அடையாளம் தெரியாத ஒருவர் - அலறிய சிறுவன்
வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்தவர், பணத்தை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனமல்வில - அளுத்கோட பாடசாலைக்கு அருகில் குறித்த வீட்டார் இரவு உணவு சாப்பிட்டு, மகனுக்கு பாடம் சொல்லி விட்டு, இரவு 11 மணியளவில் தாய் படுக்கைக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை 1:45 மணியளவில், இளைய மகனுக்கு ஏற்பட்ட தாகத்தையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் கையில் இரண்டு கருப்பு பைகளுடன் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு சிறுவன் அலறியதாகவும் அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் உடனடியாக வந்து வீடு முழுவதும் தேடி பார்த்தபோதும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்த போது படுக்கையறைக்கு அடுத்த அலமாரியில் துணிகள் கலைந்து கிடப்பதைக் கண்டுள்ளதுடன், அதிலிருந்து 19,000 ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க
Post a Comment