Header Ads



அடி காயங்களுடன் ஆணின் சடலம்


ஹோமாகம கிளை வீதியில் இன்று (10) ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


சடலத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். 


இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


சம்பவம்  தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.