July 04, 2017

வருகிற மாகாணசபை தேர்தலும், விழப்போகும் நம் சமூகமும்

-மீராலெப்பை இஃஜாஸ்-

மீண்டுமொரு பாடம் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பாவத்துக்கு பரிகாரம் செய்யவென அலைந்து திரியும் துரோகிகளுக்கு ஆதரவளித்து மொத்தமாக வழுக்கி விழாமலும் தப்பிக்கவேண்டும்.அதே நேரத்தின் வாக்குறிமையையும் சரியான விதத்தில் ஒன்று சேர்ந்து பிரயோசனமான முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

அரசியலில் இணவாதம் ஒரு புது ட்ரென்டாக மாறிவிட்டது. பொதுபல சேனா பொதுவாக மூன்று அரசியல் புள்ளிகளாலும் பயன்படுத்தப்படுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, "அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத் (3779)

இதுவரை எம்மவர்கள் எவராளும் இன்னமும் ஊகிக்கமுடியாத விடயமாக நான் யாருக்கு வாக்களிப்பது என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போதைக்கு நாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது ஏன் என்று சற்று யோசிக்கலாம்.

முன்னால் ஜனாதிபதிக்கு இரக்கம் காட்டுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்று சமமாகும். தன்னை ஆட்சிகவிழ்த்திய முஸ்லிம்கள் மீது மனதுக்குள் பித்துப்பிடித்து அலைபவர்களுக்கு ஒரு முஸ்லிம் ஒரு போதும் ஆதரவளிக்கமாட்டான். இந்த ராஜபக்ஸ சில சமயங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் சில சமயங்களில் எதிராகவும் ஒவ்வொரு இடத்திலுமு் ஒவ்வொரு வகையாக பேசி மக்களை மடையனாக்கி ஆட்சி பீடம் ஏற நிகை்கிறார். நாம் அந்தளவுக்கு மடையர்களல்லர். மேலும் மகிந்த அணியில் இருக்கும் விமல் வீரவம்சவின் சாடல்கள் எப்போதும் இஸ்லாமிய தீவரவாத ஆதிக்கத்திகையும் அதனை முஸ்லிம்கள் மீது திணிக்க முயல்வதனையும் காணலாம். ஆக இவருக்கு வாக்களிப்பதும் ஹராம்.

மகிந்தவின் தலை மறந்த பேச்சுக்கள் ஆதாரங்கள்-  http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_823.html
விமலின் துவேசப்பேச்சு –

மேலும் தற்போதய நீல கலர் ஜனாதிபதியும் காவியாக மாற்றம் பெற்றது முதல் பொதுபலா சேனாவின் மிரட்டலுக்கு அடிபணிந்து முஸ்லிம்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த விளையாட்டினையும் தெட்டத்தெளிவாக கண்காடிபோல் நண்கறிவோம். பொதுபலசேனா விடயத்தில் அறியக்கிடைத்தது. கிழக்கு மாகாணத்திற்கு ஒரு வேளை முஸ்லிம் ஆளுனர் நியமிக்கப்பட்டாலும் அசந்துவிடவேண்டாம் மக்களே. ஆக இவருக்கு வாக்களிப்பதும் ஹராம்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஜனாதிபதி.. - http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_133.html

இதுவும் உண்மையாக இருக்கலாம்  

ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத்தவறியது உறுதி - http://www.jaffnamuslim.com/2017/06/blog-post_594.html

ஜனாபதியின் ஒரு கேம்

ஜனாதியிடம் சத்தம் போடும் தேரர்கள்

ஜனாதிபதியின் கள்ளக்காதல் –

கைவிடும் ஜனாதிபதி –

மேலும் பச்சை கலர் பிரதமர் அரசியல் விளையாட்டில்  வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு பல தந்திரோபாய விளையாட்டுக்களை அரங்கேற்றி கடனை அடைக்க தன் வளவை விற்பதுபோல் மறைமுகமான ஒப்பந்தங்கள் மூலம் அமைச்சுக்களுக்கு பங்கும் தனதாட்சியின் ரகசியங்களை காப்பாற்றுவதில் மட்டும் கவணம் செலுத்தும் இவர்தான் நாட்டுக்கு தேவையா??

மேலும் வருங்கால அரசியல் இருப்பு மற்றும் கட்சியினை வளர்த்தல் என்பவையே இவருக்கு முக்கியம். எவ்வளவோ பிரச்சனைகள் எழுந்தும் அதிகாரத்தினை பதிக்கி வைத்த அதிகார கொள்ளையர்கள் நமக்கு தேவையா? ஆக இவருக்கு வாக்களிப்பதும் ஹராம்.

இறுதியில் கிழக்குமாகாண முஸ்லிம்களின் வாக்கு ஓரு  கேள்விக்குறியாகவா இருக்கப்போகின்றது..??

0 கருத்துரைகள்:

Post a Comment