Header Ads



ஜனாதிபதியும் கைவிரிக்கிறாரா..?

-இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்-

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் திட்­ட­மிட்ட இன­வாத தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்ந்த ­வண்­ண­மே­யுள்­ளன.

தினமும் காலையில் எழுந்தால் எங்­கே­னு­மொரு நகரில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் எரிக்­கப்­பட்ட செய்­தியே நம்மை வந்­த­டை­கி­றது.

நேற்று முன்­தினம் அதி­காலை நுகே­கொ­டவில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யத்­திற்கு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று அதி­காலை மஹ­ர­க­மவில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யத்­திற்கு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய கடந்த ஐந்து நாட்­க­ளுக்குள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நான்கு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாத நடுப்­ப­குதியி­லி­ருந்து நேற்று வரை சுமார் 28 க்கும் அதி­க­மான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் பெரும்­பா­லான சம்­ப­வங்கள் சி.சி.ரி.வி. கமெ­ராக்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

இருந்த போதிலும் இவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் எவரும் இது­வரை சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சி­க­ளையும் பொலிசார் மேற்­கொள்­ள­வில்லை. மாறாக இவ்­வா­றான சம்­ப­வங்­களை திரு­டர்கள் செய்­தி­ருக்­கலாம் என்றும் கடை உரி­மை­யா­ளர்­களே காப்­பு­றுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக இவ்­வாறு செய்­தி­ருக்­கலாம் என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் கூறு­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது.

தமது கட­மையை சரி­யாகச் செய்­யாது பாதிக்­கப்­பட்ட மக்கள் மீதே பழியைப் போட்­டு­விட்டுப் போவது என்­பது இந்த நாட்டின் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாது­காப்­ப­தற்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களின் கடமை அல்ல என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறோம்.
இதே­போன்­றுதான் நேற்­றைய தினம் நடை­பெற்ற ஆளும்­கட்­சியின் குழுக் கூட்­டத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் குறித்து முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளனர். இதன்­போது பொலிசார் தமது கட­மையைச் சரி­யாகச் செய்­ய­வில்லை என்றால் அப் பொறுப்பை இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கலாம் என ஜனா­தி­பதி ஆலோ­சனை கூறி­யுள்ளார்.

அப்­ப­டி­யானால் இலங்கைப் பொலிசார் இவற்றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­த­ளவு திரா­ணி­யற்­ற­வர்கள், திற­மை­யற்­ற­வர்கள் என ஜனா­தி­பதி கூற வரு­கி­றாரா? அல்­லது இரா­ணு­வத்­தி­ன­ராலும் முடி­யாது என்றால் சர்­வ­தேச இரா­ணு­வத்தை வர­வழைக்க முடியும் என ஜனா­தி­பதி கூறு­வாரா?

நிறை­வேற்று அதி­கா­ரத்தைத் தன்­வசம் வைத்துக் கொண்டு ஜனா­தி­ப­தியும் இவ்­வா­றான கதை­களைக் கூறிக் கொண்­டி­ருக்­கிறார் என்றால் இந்த நாட்டு முஸ்­லிம்கள் யாரி­டம்தான் போய் முறை­யி­டு­வது?

இதற்­கி­டையில், ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய நாடு­களின் ஒத்­து­ழைப்பு கவுன்சில் இலங்கை தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்­பான அறிக்­கையில் தாம் இலங்கை முஸ்லிம்களுக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தனது நாட்டு முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலைமை இவ்வாறே செல்லுமெனில் இலங்கை சர்வதேச நாடுகள் மத்தியில் தனக்கிருக்கும் நற்பெயரை தானாகவே கெடுத்துக் கொள்ள வேண்டிவரும். அதற்கு முன் ஜனாதிபதி கண்விழிப்பாரா?

5 comments:

  1. இவனொரு மனநோயாளி ஆளு இவனுக்கு எல்லாம் ஜனாதிபதியாக கொஞ்சம் கூட தகுதியில்லை.

    ReplyDelete
  2. முதுகெழும்பில்லாத மைத்திரியையும் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆட்சியில் அமர்த்தியவர்களுக்கும் காபிர்களை பாதுகாப்புக்கு அழைத்தவர்களுக்கும் இறைவன் வழங்கும் தண்டனையோ இது!
    கையாலாகாத அரசிலுள்ள சம்புக்க தனது அன்றிருந்த அதிகாரத்தை ஒரினச்சேர்க்கையாளருடன் சேர்ந்து பிரயோகிக்கின்றான்.
    அல்லாஹ்வே போதுமானவன்!!

    ReplyDelete
  3. ஞானசாரவும் முஸ்லீமோ என்னவோ சொல்ல தெரியா.

    ReplyDelete

Powered by Blogger.