Header Ads



மக்கா முகர்ரமா விபத்து, குறித்த ஒரு பார்வை

-Fahmy Zearth-

நாம் ஈமான் கொள்ளும் விடயம் "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலியுள் அழீம்"

எந்த சக்தியும்,எந்த விடயமும் உயர்வான அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டே இடம் பெறும். எவரின் மரணம் எங்கு எவ்வாறு என்பது அவன் அன்றி யாராலும் ஊகிக்க முடியாது,

மக்கா முகர்ரமாவில் நடந்த விபத்தில் 85 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்களின் மரணம் எம் உள்ளங்களில் கவலையை தோற்றுவிக்கிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயாக அள்ளாஹ் வுக்காக இருக்கிறொம் அவனிடமே மீட்கப்படுவோம்)

வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் எங்கள் நாயகம் முகம்மத்(ஸல்) அவர்கள் பள்ளிவாயலின் பக்கம் விரைவதுடன் பிரார்த்தனை யிலும் ஈடுபடுவார்கள் என நபி மொழியை அறிகின்றோம்.

இன்றைய தேதியில் பரவலாக அரேபியாவில் மழை பொழிந்ததை அறியக்கிடைத்து,பொதுவாகவே மழை பெய்யாத நாட்டில் மழையும்,மறுபுறம் மக்காவில் பலத்த காற்றும்,

மக்காவிற்கு சமீபமான நகரமான ஜித்தாவில் புழுதிக்காற்றும் அங்கேய காலநிலையல் கடும் மாற்றத்தை கோடிட்டு காட்டுகிறது. புனித ஹரம்களின் அபிவிருத்தி பணிகள் தற்போது இடம்பெறும் சூழலில் இது மிக கவலை தோய்ந்த அனுபவமாகும்.

புனித ஹரம் கட்டுமானப் பணிக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த Crane பாரந்தூக்கி பெருங் காற்றில் சாய்ந்து விழுந்த்தாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

தற் காலத்தில் உலகம் சந்திக்கும் சவால் புவி வெப்பமடைதலாகும்,புவி வெப்பமடைவதன் பிரதி பலனாக பாலை நிலங்கள் இடையிடையே மழையை காண்பதும்,பனிப்பாறைகள் உருகுவதும்,எமது நாடுகளில் பருவ காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும்(வெயிலடிக்க வேண்டிய பெப்ரவரியில் கூட மழை பொழிகிறது) அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

அரேபிய நாடுகளில் வீதி,கட்டிட நிர்மாணம் போன்றவைகள் பாலை நில கால நிலையை கருத்தில்கொண்டு மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் தற்போது மழைக்கும் ஏற்றவாறு மாற்றும் சவாலை கொண்டுள்ளன.

அண்மை நாட்களில் அங்கு மழை வெள்ளம் தேங்கும் காட்சிகளை இணையங்களில் காணக்கிடக்கிறது.அறிய முடிகிறது.

புனித ஹரம்களின் பாதுகாவலர்கள் அங்கு மிக சிரத்தை எடுத்து யாத்திரிகளின் பாதுகாப்பிலும்,ஹரம்சரீப் களை துப்புரவு,சுகாதார சேவைகளை மேற்கொள்வதை அவதானிக்கின்றோம் பாராட்டுகின்றோம்.

ஆனால் அள்ளாஹ் வின் ஏற்பாடு கழா எனும் விதி இந்த நிகழ்வு, இஹ்ராம் ஆடையுடனும், புனித ஹஜ்ஜையும் நாடி வந்த பயணிகள் யார் எல்லாம் வபாத்தானார்களோ அவர்களின் புனித பயணத்தை அந்த கஃபாவின் இறைவன் ஏற்றுக்கொள்வதுடன், அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பதாருக்கு அவனே உதவி புரிவானாக, சபூறன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக,

யார் எல்லாம் இன்றைய அசம்பாவித்தில் பாதிக்கபட்டார்களோ அவர்களின் வேதனையையும் சோதனையையும் யா அள்ளாஹ் இலகுபடுத்தி வைப்பாயாக,

எவர்களுக்கெல்லாம் அந்த புனித பூமியில் மரணிக்கும் ஆசை இருக்கிறதோ அவர்களுக்கு அதனை வழங்கிடு  இறைவா எங்கள் அனைவருக்கும் நீ அங்கீகரித்த ஹஜ்ஜை அருள்வாயாக ஆமீன்

12 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். யா அல்லாஹ் இந்த ஹஜ்ஜாஜிகளின் பாவங்களை மன்னித்து அங்கிகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலியான மேலான சொர்க்கத்தை கொடுப்பாயாக.

    ReplyDelete
  3. INNALILLAHI WINNA ILAIHI RAJIHOON

    ALLAH ELLORUKKUM NATPAKKIYATHAIYUM JANNATHUL FIDOUSAYUM KODUPPANAHA AAMEEN

    ReplyDelete
  4. உங்கள் கருத்தை கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த காலநிலை பற்றி அந்நாட்டு விஞ்ஞானிகள் அரசாங்கத்துக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக ஹஜ்ஜாஜிகள் நிரம்பி உம்ரா கிரிகைகளில் ஈடுபடும் விசேடமாக ஜும்ஆ நாளில் காபா நிரம்பி வழியும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக அந்த இயந்திரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் கவனயீனம் காரணமாக சவூதி அரசாங்கம் அதைச் செய்யவில்லை. எனவே அரசின் கவனயீனத்தின் காரணமாக மிகவும் பெறுமதியான உயி்ர்கள் பலியாகி மரணிப்பதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. எந்த ஒரு நாடும் அவர்களின் ஹாஜிகளை பலிகடாக்களாக செத்து மடிய மக்கா அனுப்புவதில்லை.எனவே காலம் சென்ற ஹாஜிகளின் நாடுகள் சவூதி அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நட்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் இத்தகைய அசிரத்தையற்ற போக்கைத் தடுக்கவும் குறைந்தது ஹாஜிகளின் உயிரில் நாடுகள் அக்கறை காட்டுகின்றது என்பதையும் உலகுக்கு நிரூபிக்க முடியும்.

    ReplyDelete
  5. புனித மக்காவிலேயே தனது பக்தர்களை அல்லாஹ்வால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதா என்கின்ற வாறான காபிர்களின் கிண்டல் அதிகரித்துவிட்டது.

    மனிதனின் பேராசையால் ஏற்பட்ட தவறுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும்?

    ReplyDelete
  6. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ”இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்நுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் ழூழ்கி இறப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள்”.
    என அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்…. ஸஹீஹ் புகாரி: 653

    ReplyDelete
  7. நேற்றைய நிகழ்வுக்கு சவூதி அரசு பொறுப்பு கூறி வேண்டும்.

    ReplyDelete
  8. நினைத்த நேரத்தில் நினைத்த படி நிறுவுவதற்கு நீங்கள் நினைப்பது போல் அந்தப் பாரம் தூக்கிகள் ஒன்றும் அளவிலும் எடையிலும் சிறியவை அல்ல மட்டுமின்றி அத்தனை சுலபமான காரியமுமல்ல.
    அவை ராட்சத பாரந்தூக்கிகள் அவற்றை நிறுவுவதற்கே இரண்டு தொடக்கம் மூன்று வாரமாகலாம்.
    ----
    காபிர்களின் கிண்டல் கிடக்கட்டும் விடுங்கள் " எங்கிருந்தாலும் மரணம் வந்தே தீரும்" மக்காவில் இருந்தால்...அதிலும் கஃபத்துல்லாவுக்குள் இருந்தால் மரணம் பிடிக்காதா என்ன? ஆனால் இதில் உயிர் நீத்தவர்கள் நாளை மறுமையில் இஹ்ராமுடன் எழுப்பப் படுவார்கள் என்பது உறுதி. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக. அவர்களது குடும்பத்திற்கு பொறுமையை கொருப்பானாக

    ReplyDelete
  9. There are two sides for this incident. One is that accidental incidents occur everywhere. May be those who are died in this accident died as shaheed, it is narrated by Muslims and Bukhari categories of shahada extend to fighting in the path of Allah to that of accidental occurrences. such as Drowning In water. People who die in some natural disaster such as Tsunamis or flood or earth quakes are some of these Shaheed. This is beyond Human control, Even Saudi kings can not stop natural disasters or accidental death. yet, Saudi governments has great responsibilities on its shoulder to look after Hajjajis. of course, these developments are done in helping and facilitating future pilgrims. and yet, did they take safety measures? why should they do building work on this occasion? why did not stop all work near the Kaba during this time? These are some of the questions all ask?
    Health and Safety is not that much important in third world country and they do not have any clue about it not that much. Only after accident they think about it. Let future pilgrims do not have such incidents and let us hope Saudi pay compensation for all these victims. The company which did the building works should pay it to relatives of these victims.

    ReplyDelete
  10. Births and deaths are decided in this world by ALLAH.Everyone must understand this fact.

    ReplyDelete
  11. சவூதி அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்ப முடியாது.

    எப்பொழுது பார்த்தாலும் கஹ்பாவிலும், மதீனாவிலும் புனரமைப்புப் பணிகள் முடிவில்லாமல் நடப்பதன் மர்மம் என்ன? உலகின் எத்தனையோ கட்டட, நகர நிர்மாணங்கள் அடுத்த நூறு வருடங்களுக்கு என்று திட்டமிடப்பட்டு முடிக்கப் படுகின்றன.

    அடுத்த ஐம்பது வருடங்களுக்கு எத்தனை ஹாஜிகள் வருவார்க என்கின்ற அண்ணளவான எண்ணிக்கையை வைத்து மக்கா, மதீனாவின் புனரமைப்பை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு சவுதிக்கு அறிவில்லையா?

    ReplyDelete
  12. Subaideen Abdeen,

    அப்போ வசீம் தாஜுடீனின் மரணத்தையும் அப்படியே விளங்கிக்கொண்டு கேசை மூடி பைலை மூலையில் போட்டுவிட்டு போக வேண்டியதுதானே, அப்படியே காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கும் இதே வேலையை செய்ய வேண்டியதுதானே.

    ReplyDelete

Powered by Blogger.