Header Ads



மஹிந்தவின் மீள் வருகை, மைத்திரி மீது முஸ்லிம்களுக்கு அவநம்பிக்கை, UNP க்கு பலம், அதாவுல்லா + ஹிஸ்புல்லாவின் வெற்றி கேள்விக்குறியாகும்

மஹிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையும், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியதும் முஸ்லிம் சமூகத்தினரிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடவிருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் முன்னாள் பிரதிமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் வெற்றிகள்கூட கேள்விக்குறியாகலாமெனவும் அந்த முன்னாள் முஸ்லிம் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

2...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான  நியமனத்தை வழங்குவதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முடிவையடுத்து  இலங்கை அரசியற்கட்சிகள் புதிய கூட்டணிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


புதிய அரசியற்கூட்டணியில் மகிந்தராஜபக்சவிற்கு எதிரான பல அரசியற்கட்சிகள் இடம்பிடிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள அரசியல்ஆய்வாளர்கள் இவை பலவீனமான நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடலாம் என தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் மீள்வருகையை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகலாம், மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து  விலகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை ஜனவரி 8 ம் திகதி மௌனப்புரட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன்  என தெரிவித்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கியப்பட்ட கட்;சிகள் தங்களது நிலைப்பாட்டை  தற்போது மீள்பரிசீலனை செய்து வருகின்றன.

தங்களுடைய முக்கிய அரசியல் எதிரியின் பிரச்சாரத்துடன் தாங்கள் நெருக்கமாக காணப்பட்டால் தங்களது நம்பிக்கை தன்மை பாதிக்கப்படும் என அந்த அரசியல்கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜாதிக்க ஹெல உறுமய விலகிவிட்டது

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து சிந்தித்து வருகின்றது. மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால் நாங்கள் அவரை தோற்கடிப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியற் கூட்டணியை அமைக்க தயார் என சரத்பொன்சேகா  கட்சி பேச்சாளர் ஓருவர்  தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நியூட்டனின் மூன்றாம் விதி

    ReplyDelete
  2. முன்னாள் முஸ்லிம் தனது கவலையை ??
    Why you say like this?
    May be spelling mistakes
    Change asap

    ReplyDelete

Powered by Blogger.