Header Ads



மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்க UNP யே காரணம் - எஸ்.பி. திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் திருட்டுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எதிர்பார்த்ததனைப் போன்று 20ம் திருத்தச் சட்டம் மற்றும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. 

கடந்த அரசாங்கத்தை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி திருட்டுக்களில் ஈடுபட்டது.

கட்சியை தூய்மைப்படுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற வீண் விரயத்தை கட்டுப்படுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்த ஜனாதிபதிக்கு முடியும். இனி வரும் காலங்களில் நாட்டில் மஹிந்த சிந்தனை அமுல்படுத்தப்படாது. மைத்திரி ஆட்சியே முன்னெடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பிரதமர் வேட்பாளர் வழங்கப்படாமையை சிலர் எதிர்த்த போதிலும் வேட்பு மனு மட்டும் வழங்கியமை சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும்.

மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியதன் மூலம் கட்சி பிளவடைவது தவிர்க்கப்பட்டது என எஸ்.பி. திஸாநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.