Header Ads



அல்லாஹ்வை நம்பிக்கொண்டு உள்ளே சென்றேன் - மனம் திறக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்

ஹிரு தொலைக்காட்சியில் நேற்று வியாழக்கிழமை (21) இரவு வில்பத்து விடயமான விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்றார்.

இன்று காலை Jaffna Muslim இணையம் றிசாத் பதியுதீனை தொடர்புகொண்டது. இதுதொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு,

குறித்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னர் 2 ரக்காஆத் சுன்னத் தொழுகையை நிறைவேற்றினேன். அல்லாஹ்விடம் இருகரமேந்தினேன். அல்லாஹ்வை நம்பிக்கொண்டு (தவக்கல்து அலல்லாஹ்)  ஹிரு தொலைக்காட்சிக்கு சென்றேன்

குறித்த நிகழ்ச்சியில் பங்குகொண்டதன் மூலம் இலட்சக்கணக்கான சிங்கள சகோதரர்களின் மனதில் குடிகொண்டிருந்த தவறான நிலைப்பாட்டை நீக்கமுடிந்துள்ளது என நம்புகிறேன்.

சிங்கள அரசியல்வாதிகளும் றிசாத் காணி பிடித்துள்ளார் என்றும், வில்பத்து காட்டுப் பகுதியில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் சொல்லிக்கொண்டனர். இவற்றுக்கு மேலதிகமாக ஊடகங்கள் மிக மோசமான பிரச்சாரத்தை எனக்கு எதிராகவும், எனது சமூகத்திற்கு எதிராகவும் முன்னெடுத்தன.

இந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் தற்போது பதில் வழங்கப்பட்டுள்ளது. இனியும் இந்த பிரச்சாரங்கள் தொடருமாயின் அது என்மீதும் நான் சார்ந்திருக்கும் சமூகம் மீதும் இவர்கள் கொண்டுள்ள பொறாமையும், தனிப்பட்ட சுயநலன்களும், மற்றும் இனவாதமுமே காரணம் என்பது தெளிவாகிறது.

இந்த விவகாரத்தில் என்னுடன்இரண்டரக் கலந்திருக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எனது நன்றிகளை சொல்கிறேன். இந்த விவகாரத்தில் ஆர்வத்துடன் ஒத்துழைத்த சகோதரர்கள், எனக்காக பிரார்த்தித்த சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

 அவ்வாறே குறித்த விவாத நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் விவாதம் குறித்தும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு தான் வழங்கிய ஆதாரமான பதில்களை வரவேற்று தன்னை தொடர்புகொண்டதாகவும் றிசாத் பதியுதீன் Jaffna Muslim இணையத்திடம் மேலும் சொன்னார்.

18 comments:

  1. al hamthulillah , allah ullangalai arinthavan

    ReplyDelete
  2. Masha Allah ,Alhamdulillah ,Allahu Akbar.Hon.Mr.Rizath badiuddin.don't worry ur respond to dawakkalthu allallah & ur make 2 rakah sunnah that's enough to u Allahu subanahuthalah inshaallah with u because ur intense is clear ur r act only for Muslim n other community also I prayed for u &t all the best.jazzakkallaukairah .

    ReplyDelete
  3. Masha Allah , May almighty Allah give you more strength

    ReplyDelete
  4. Go ahead allah will help you Insha allah

    ReplyDelete
  5. Did u do da same thing before break away from SLMC??

    ReplyDelete
  6. alhamdulillah.............

    ReplyDelete
  7. good thing that you have provide the complete statement

    ReplyDelete
  8. Al hamdulillaah ungal sevai mahaththaanadu

    ReplyDelete
  9. இஹ்லாஸோடு தொடர்ந்து சேவை ஆற்று ங்கள். அல்லாஹ் உதவி செய்வான்.

    ReplyDelete
  10. சிங்கத்தின் குகைக்குள் சென்று சிலிர்த்துச்சீறிவிட்டு (ஓசை நயம் ஓகேவா..?) வந்த தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். தலைவர் அஷ்ரப் அவர்கள் நீங்கலாக, ஒரு சராசரி முஸ்லீம் அரசியல்வாதிக்கு இந்தத் துணிவு எப்படிச் சாத்தியமானது..? கோட்டும் சூட்டும் ஆணிந்து திரியும் எத்தனையோ பேருக்கிடையில் றிசாத்துக்கு மட்டும் இத்தகைய துணிவை அள்ளி வழங்கியது எது..?

    நியாயத்திற்காகப் போராடுகின்றோம் என்ற உணர்வுதான்!

    இப்பொழுது புரிகின்றதா.. இன்றுள்ள அரசியல்வாதிகள் உண்மையில் எதைச்செய்யவேண்டும் என்பதை..?

    ஐயா அரசியல்வாதிகளே..! மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மட்டும் நீங்கள் தலைமையேற்றுப் பாருங்கள். உங்கள் முதுகுப்புறத்தில் இதுவரை இல்லாத முள்ளந்தண்டென்புகள் உருவாகுவதை நீங்களே உணர்வீர்கள்..

    ReplyDelete

Powered by Blogger.