Header Ads



புலிகள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை, சுட்டிகாட்டும் மஹிந்த ராஜபக்ஷ

(எம்.ஏ.றமீஸ்)

இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மூவின சமூகங்களையும் சேர்ந்த மக்களை நிம்மதியாக வாழ வைத்த நாம் மிக விரைவில் இந்நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை உருவாக்கி மக்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(21) அம்பாறை நகரில் உள்ள மகாவாபி விகாரையில் இடம்பெற்ற விஷேட போதி பூஜையில் கலந்து கொண்டதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தின்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் மேலும் உரையாற்றுகையில், இந்நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையால் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர். அதுமட்டுமல்லாமல்; இந்நாட்டில் சிறந்த பாதை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் விரும்பிய இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் சென்றுவர முடிகின்றது. மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் உலாவுவதற்கான சூழ்நிலையினை தோற்றுவித்தமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறான முஸ்லிம் பிரதேசங்களில் மதக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் அப்பாவி முஸ்லிம்கள் வேண்டுமென்றே புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தலைவர்களின் உயிர்களை விடுதலைப் புலிகள் வேண்டுமென்றே உறுஞ்சிக் குடித்தனர். அந்த வரிசையில் பொத்த பிக்குகள் அருந்தலாவ போன்ற இடங்களில் வேண்டுமென்றே புலிப்படுகொலை காரர்களால் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமியர்களின் மதக் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமைக்காக சென்றுகொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்களை வேண்டுமென்றே கொலை செய்து அவர்களின் மிலேச்சத்தனத்தை காட்டினார்கள். அதுமட்டுமல்லாமல் எமக்கு பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் படைவீரர்கள் போன்றோரையும் விடுதலைப் புலிகள் கொன்று குவித்தனர். இவ்வாறாக நீண்டுகொண்டிருந்த கொலைக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களை நிம்மதியாகவும் சுபீட்டமாகவும் வாழ வைக்க நாம் பல்வேறான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஜனாதிபதியை பதவி விலக்கச் செய்வதற்காக நாம் முயன்றோம் என்று சொல்கின்றவர்கள் தற்போது மாகாண சபைகளின் ஆட்சியில் மாற்றத்தையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்திருக்கின்றார்கள். சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த உள்ளுராட்சி சபைகளைக் கலைத்து குழப்பமாக சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்கிக் கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட சமுர்த்தி உயரதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றார்கள்.

அமைச்சர்களையும் சிறந்த அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைப்பதுடன் பழிவாங்கும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சியா? அரிசி பருப்பு போன்ற அத்தியவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டுதான் செல்கின்றது. இவ்வாறான ஆட்சியினை நாம் மாற்றியமைத்து மிக விரைவில் மக்கள் விரும்பக்கூடிய அரசியல் கலாசாரத்தையும் நிம்மதியான சூழலையும் ஏற்படுத்தவுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியானி விஜய விக்கிரம, பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான விமலவீரதிஸாநாயக்க, வீரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் என பலர் கலந்து கொண்டனர்

3 comments:

  1. LTTE terrorists are real terrorists and the whole world knows that. the bbs terrorists you created when you were the president ? who attacked and killed muslims ? that is why you are going to temples instead of temple tress.

    ReplyDelete
  2. தலைப் பேன்களை முற்றாகக் களைந்தமைக்கு நன்றி. அதற்காக எங்கள் கழுத்தை அறுப்பதற்கு கத்தி வைத்திடலாமோ ஐயா நீங்கள்..?

    பேசாமல் போய் ஓய்வெடுங்கள் ஐயா.. மரியாதையாவது சிறிது மிஞ்சும்!

    ReplyDelete
  3. பெளத்த தீவிர வாதிகள் செய்த அநியாயங்களையம் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.