Header Ads



ரவி கருணாநாயக்கவினால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு மற்றுமொரு அவமானம்..!

திறைசேரி முறிமோசடி தொடர்பான சர்ச்சையில் சிக்குண்டுள்ள அரசாங்கத்திற்கு மேலும் அவப்பெயரை உருவாக்க கூடிய இன்னொரு விவகாரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களிற்கு முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்த சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர தொடர்பானதே இந்த சர்ச்சை

நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தனது சொந்த நிறுவனத்திற்கு வரி தொடர்பான சலுகைகளை அளிக்குமாறு சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை கேட்டுள்ளார்.எனினும் இவ்வாறு வரிச்சலுகை அளித்தால் நாடு பல மில்லியன்களை இழக்க வேண்டிவரலாம் என்பதை காரணம்காட்டி அந்த அதிகாரி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

விஜயவீர தனிப்பட்ட காரணங்களுக்காவே பதவி விலகியதாக தெரிவித்திருந்தாலும், சுங்கத்திணைக்களத்தில் உள்ள தனது சகாக்களிடம் அவர் நிதி விடயங்களில் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் தலையீட்டை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் தனது நிறுவனத்திற்கு மாத்திரமன்றி தனது நண்பர்கள் பலரின் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றார்,எனவும் பதவியை இராஜினாமா செய்த அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குளோபல் பார்க் என்ற தனது நிறுவனத்திற்காக பல மில்லியன் டொலர் வரிச்சலுகைகளை கோரியுள்ள நிதியமைச்சர், தனது நண்பர்களின் நிறுவனங்களுக்காக நாளாந்தம் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை தொலைபேசியில் தொடர்புகொள்வதை வழக்கமாககொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓரு கட்டத்தில் பொறுமையிழந்த அதிகாரி தன்னால் இனிமேலும் நிதியமைச்சர் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது,பொதுமக்களின் பணத்திற்கு நான் பொறுப்புக்கூற விரும்புகின்றேன் என தனது சகாக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாகவே திங்கட்கிழமை இரவு குறிப்பிட்ட அதிகாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்காக காரணங்கள் தெரியவராத நிலையில் சுங்கத்திணைக்களத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய நஷ்டங்களுக்கு பொறுப்பேற்றே  அவர் பதவி விலகியிருக்கலாம் என நிதியமைச்சர் குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இதனை மறுத்துள்ள சுங்க அதிகாரியொருவர் தங்களது திணைக்களம் தற்போது நாளொன்றிற்கு 5 பில்லியனிற்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதவியை இராஜினாமா செய்த விஜயவீர ஜனாதிபதி சிறிசேனவின் நம்பிக்கையை பெற்றவர் அதன் காரணமாகவே அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் களவாடப்பட்ட அரசசொத்துக்களை மீட்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க நிதியமைச்சரிற்கு எதிராக தாங்கள் தயாரித்துவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் இந்த விடயத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைத்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் திறைசேரி முறி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய வங்கி ஆளுநரின் நெருங்கிய உறவினருக்கும் நிதியமைச்சருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. This is the problem if you put the wrong person into wrong position! They can easily take advantage for their own good !

    ReplyDelete
  2. Whom do we have to believe in Sri Lankans politics?kept on says cast your vote(right) for suitable person(again who is suitable) people has to know that politics is a big business

    ReplyDelete

Powered by Blogger.