Header Ads



பொதுபல சேனாவை தடை செய்யமாட்டேன் - மஹிந்த பிடிவாதம்

பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அளுத்கம வன்முறைகளுக்குக் காரணமான பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் காலையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். 

அதற்கு சிறிலங்கா அதிபர், பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் கதாநாயகர்களாகி விடுவர் என்றும் குறிப்பிட்டார். 

அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அதன் மூலம் மதங்களுக்கிடையிலான பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பை மோசமாக மீறும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களைக் கைது செய்திருந்தாலும் கூட, அத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்காது என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறைகளுக்கு சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளே பொறுப்பு என்று குறிப்பிட்டார். 

அதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பொது பலசேனவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

அப்போது, குறுக்கிட்ட அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, பொதுபல சேனாவைப் பாதுகாக்க ஜாதிக ஹெல உறுமய முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

8 comments:

  1. Intha arasaankaththukku aliwum intha bodu bala sena waalthan anpathai arasaankam innum puriyawillai oru naalakku wartha kada nenchil paayum appa theriyum unkalukku

    ReplyDelete
  2. பொது பலசேனவை கைது செய்யாமல் நாட்டில் பிரச்சினை தீராது. இன்னும் பாணந்துறையில் Nolimit எரிக்கப்படுள்ளதே? மேலும் மேலும் முஸ்லிம்களின் உடமைகள் நாசமாக்கப்படுவதற்கு யார் காரணம் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக நீர் பாரா பட்சம் காட்டுகின்றீர் உமது சுய நலத்திற்காக சிறுபான்மையினரை பலிக்கடாவாக்கி உமது அபிலாசைகளை வெல்ல முயற்சிக்கிறீர்.

    முஸ்லிம் சகோதரர்களே இப்பிரச்சினையை விடவே கூடாது நாம் இதை சர்வதேச அரக்கிற்கு கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்கள். முடிந்தளவும் வெளி நாடுகளில் உள்ளவர்கள், மற்றும் வெளி நாட்டு புத்தி ஜீவிகள், மற்றும் பெரியோர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து இலங்கையில் தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை விபரித்து அத்துடன் அதற்குரிய தீர்வையும் முஸ்லிம்களுக்குரிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  3. அமைச்சர் ஹக்கீமீன் விடயங்களில் சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அவரின் தற்போதைய செயற்பாடு அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்கின்றது என்பது மறுக்கப்படாத உண்மை அத்தோடு அமைச்ச்ர் ஹக்கீமும் றிசாத்தும் அரசிலிருந்து தானக விலகமால இருந்து இன்னும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்த வேண்டும்

    ReplyDelete
  4. Mahinda he will not band BBS,actually he & his brother Mahinda controlling BBS,how he will band?

    ReplyDelete
  5. கண்ணெதிரே வீடியோ அத்தாட்சி இருந்தும் ஆதாரத்தை கொடுங்க என்று அறிவு மிக்க நமது ஜனாதிபதி கேக்கும் பொது புரிய வில்லையா இது அவர்களின் நாடகம் என்று. அவருக்கு கடவுள் தண்டனை பட்டி தெரியாது போல கொஞ்சம் முடிந்தால் விளங்க படுத்துங்க

    ReplyDelete
  6. Veruvaakkilam kedda ajaahil.

    ReplyDelete
  7. போதுபலசெனாவை காப்பாற்ற மட்டுமல்ல அதனஊடாka
    சேர்ந்து இயங்குவதும் இனவாத கருத்துகளை அரசில் இருந்ந்து கொண்டு அடிக்கடி அறிக்கைவிடுவதும் இவரே அனைத்தும் அப்பட்டமான பொய்கள் என்பதை சிங்கள சகோதர சகோதரிகளும் அறிவர் இவருக்கு தண்டனைகள் இறைவன் ஒருவனே வழங்குவான் போருமைகாட்போம்

    ReplyDelete

Powered by Blogger.