Header Ads



ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் அளுத்கம விவகாரம் - ஜேர்மனி,கனடா,நோர்வே கேள்வியெழுப்பின


அளுத்கம பிரதேசத்தில் கடந்த வாரம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்டபெற்ற வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் நடந்துவரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜேர்மனி, கனடா, நோர்வே ஆகிய நாடுகளே அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பின.

இதனையடுத்து, இலங்கையின் ஜெனிவாவுக்கான பிரதி தூதுவர் மனிசா குணசேகர,  பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

அவ்வறிக்கையில்,

இலங்கை அரசாங்கம் எந்தவொரு இன அல்லது மத வன்முறைகளையும் மன்னித்ததில்லை. சம்பவம் தொடர்பான நம்பகமான தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

எல்லா மக்கிளனதும். வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களினதும் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று இந்த சபைக்கு உறுதிமொழி அளிக்கிறது.

இந்த வன்முறைகளில், 2 முஸ்லிம்கள் ஒரு தமிழர் என மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

6 காவல்துறையினர் உள்ளிட்ட 13 சிங்களவர்கள், 13 முஸ்லிம்கள் என 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு சமூகங்களினதும், 69 வீடுகள், 83 கடைகள், 11 வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

28 சிங்களவர்கள், 17 முஸ்லிம்கள் என 43 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில், 12 சிங்களவர்கள், 5 முஸ்லிம்கள் என 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வன்முறைச்சம்பவங்களுக்க பொறுப்பானவர்கள் மீது பாராபட்சமற்ற விசாரணை நடைபெறுமென அனைத்து சமூகங்களுக்கும் உறுதியளித்துள்ளார் என அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இன்னமும் கடைகள் எரிக்கப்படுகின்றன இதற்கு மகிந்தவால் பதில் சொல்ல முடியுமா? அல்லது தடுத்து நிறுத்தாமைக்கோ, முன் எச்சரிக்கையாக இருக்காமைக்கோ சரியான பதில் தர முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.