Header Ads

மத வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

(அஸ்ஸைய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நழீமி)

  அண்மைக்காலமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வின்மையும் மோதல்களும் ஏற்பட்டுவருவதன் விளைவாக மத வழிபாட்டுத்தலங்கள் மீது அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதும் மத சுதந்திரத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.இது  மிகுந்த கவலையைத் தருகிறது. பல்லின சமூதாயத்தில் மிகவும் உயர்ந்தபட்சமாகப் பாதுகாக்கப்படவேண்டிய மத மற்றும் வழிபாட்டு சுதந்திரங்களுக்கு வேட்டுவைக்கப்பட்டுவருகிறது. இது மனித மனங்களில் நிலவும் வன்மைக்கும் ஆவேசத்துக்குமான தெளிவான வெளிப்பாடுகள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இஸ்லாமிய நோக்கு

 மனிதனுக்கான அடிப்படை மனித உரிமைகளான உயிர், உடமை, மானம், உடல், மதம்,அறிவு, என்ற ஆறு உரிமைகளையும் வழங்கி அவற்றை பாதுகாத்துக் கொடுக்க உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என்று இஸ்லாமிய ஷரீஆவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு 'மஸாலிஹ்' என்று கூறப்படும். அந்தவகையில், நாகரீகமடைந்த, மனித விழுமியங்களுக்கு மதிப்பு வழங்கும் எந்தவொரு சமூகமும் இவற்றை பாதுகாக்கவன்றி அழிப்பதற்கு முயற்சிக்கமாட்டாது. 

   இஸ்லாமிய நோக்கில் எந்தவொரு மதத்தை சார்ந்தவரது மத நம்பிக்கைக்கும் அவரது வழிபாட்டுத்தலங்களுக்கும் வழிபாடுகளுக்கும் கலாசார தனித்துவங்களுக்கும் ஊறு விழைவிக்கப்படக்கூடாது. இஸ்லாம் தவிரவுள்ள அனைத்து மத நம்பிக்கைகளும் வழிபாடுகளும் பிழையானவை என்று ஒரு முஸ்லிம் நம்பினாலும் தனது மதத்தை பிறரில் திணிப்பதற்கோ அதற்காக எவரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலாத்காரப்படுத்துவதற்கோ அவனுக்கு உரிமை வழங்கப்படவில்லை. 'மார்க்கத்தில் பலாத்காரமில்லை'இ 'அவர்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்ற அல்லாஹ் அல்லாதவர்களை (தெய்வங்களை) நீங்கள் ஏச வேண்டாம். அவ்வாறு நீங்கள் ஏசும்பட்சத்தில் அதன் விளைவாக எவ்வித அறிவுமின்றி அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்' ( 6:108) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

 அந்தவகையில் மார்க்க பிரசாரம் பலாத்காரமாக  மாறுவதை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. 'அவர்களுடன் நீங்கள் மிகவும் அழகிய முறையில் கருத்துப் பரிமாறுங்கள்'.(16:125) என்று கூறியதன் மூலம் பிரச்சாரத்துக்கான வழிமுறையானது 'அழகியது' என்ற நிலையிலிருந்து 'மிகவுமே அழகியது' என்ற பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான். மிகவும் அழகிய வழிமுறை எனும்போது ஆதாரங்களோடு பேசுவது, அறிவு பூர்வமாகவும் இங்கிதமாகவும் இனிமையாகவும் உரையாடுவது, பிறருக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுத்து கருத்துப் பரிமாறுவது போன்ற பண்புகளை அது பெற்றிருக்க வேண்டும் என்பதனை புரியமுடிகிறது.

 மிகவுமே அழகிய வழிமுறைகளில் ஒரு முஸ்லிம் தனது பிரசாரத்தை மேற்கொண்ட பின்னரும் பிற சமயத்தவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களைப் பலாத்காரப்படுத்தாமல் அவர்களை முழுமையாக சகித்துக்கொள்வதுடன் அவர்களுடன் மிகுந்த சகவாழ்வை மேற்கொள்வது கடமை என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு குர்ஆனின் பல வசனங்கள் உதாரணமாக அமைகின்றது. 

 நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் யூதர்கள், கிறிஸ்த்தவர்கள், சிலை வணங்கிகள் அனைவரையும் 'தீம்மிக்கள்' (பாதுகாக்கப்படவேண்டியவர்கள்) எனப் பெயரிட்டு மதீனா சாசனத்தின் கீழ் அவர்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கினார்கள். அவரவர் தத்மது நம்பிக்கைக் கோட்பாடுகளிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது. 

 குர்ஆனின்(17:40)இல் இடம்பெற்றுள்ள வசனத்தில் இஸ்லாமிய ஆயுதப் போராட்டத்தின் நோக்கங்களில் ஒன்று பிறமத ஆலயங்களைப் பாதுகாப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாலயங்கள் மீது எவரும் அத்துமீறல் செய்யும்போது அவற்றை தடுத்து நிறுத்த முஸ்லிம்கள் முன்வருவார்கள் என்பது அந்த வசனம் உணர்த்த வரும் கருத்தாகும். 

  'மனிதர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் கிறிஸ்தவ பாதிரிகள் தங்கும் மடங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் யூதர்களது வழிபாட்டுத் தலங்களும் அல்லாஹ்வின் நாமம் அதிகமாக ஞாபகப்படுத்தப்படும் பள்ளிவாசல்களும் இடித்து நொறுக்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவர்களுக்கு கட்டாயமாக உதவிசெய்வான், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன்'(17:40) என அல்லாஹ் கூறுகிறான்.

 இந்த வசனம் அற்புதமான கருத்துக்களை முன்வைக்கின்றது. இதற்கு விளக்கம் கூறும் கலாநிதி முஸ்தபா சிபாஈ அவர்கள்,'ஜிஹாதின் நோக்கம் தேவாலயத்தின் இடிபாடுகள் மீது பள்ளிவாசல்களை அமைப்பதல்ல, மாறாக தேவாலயத்துக்குப் பக்கத்தில் பள்ளிவாசலை அமைப்பதாகும்' என்கிறார். ஸையித் குதுப் இவ்வசனத்தை விளக்குகையில் 'மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் நாமம் அதிகம் உச்சரிக்கப்படும் பள்ளிவாசல்களைப் போலவே ஏனைய சமயத்தவரது வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ; அழகிய வழிமுறை எனும்போது ஆதாரங்களோடு பேசுவது, அறிவு பூர்வமாகவும் இங்கிதமாகவும் இனிமையாகவும் உரையாடுவது, பிறருக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுத்து கருத்துப் பரிமாறுவது போன்ற பண்புகளை அது பெற்றிருக்க வேண்டும் என்பதனை புரியமுடிகிறது.

 மிகவுமே அழகிய வழிமுறைகளில் ஒரு முஸ்லிம் தனது பிரசாரத்தை மேற்கொண்ட பின்னரும் பிற சமயத்தவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களைப் பலாத்காரப்படுத்தாமல் அவர்களை முழுமையாக சகித்துக்கொள்வதுடன் அவர்களுடன் மிகுந்த சகவாழ்வை மேற்கொள்வது கடமை என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு குர்ஆனின் பல வசனங்கள் உதாரணமாக அமைகின்றது. 

 நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் யூதர்கள், கிறிஸ்த்தவர்கள், சிலை வணங்கிகள் அனைவரையும் 'தீம்மிக்கள்' (பாதுகாக்கப்படவேண்டியவர்கள்) எனப் பெயரிட்டு மதீனா சாசனத்தின் கீழ் அவர்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கினார்கள். அவரவர் தத்மது நம்பிக்கைக் கோட்பாடுகளிலேயே தொடர்ந்தும் இருப்பதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது. 

 குர்ஆனின்(17:40)இல் இடம்பெற்றுள்ள வசனத்தில் இஸ்லாமிய ஆயுதப் போராட்டத்தின் நோக்கங்களில் ஒன்று பிறமத ஆலயங்களைப் பாதுகாப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாலயங்கள் மீது எவரும் அத்துமீறல் செய்யும்போது அவற்றை தடுத்து நிறுத்த முஸ்லிம்கள் முன்வருவார்கள் என்பது அந்த வசனம் உணர்த்த வரும் கருத்தாகும். 

  'மனிதர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் கிறிஸ்தவ பாதிரிகள் தங்கும் மடங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் யூதர்களது வழிபாட்டுத் தலங்களும் அல்லாஹ்வின் நாமம் அதிகமாக ஞாபகப்படுத்தப்படும் பள்ளிவாசல்களும் இடித்து நொறுக்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவர்களுக்கு கட்டாயமாக உதவிசெய்வான், நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாவரையும் மிகைத்தவன்'(17:40) என அல்லாஹ் கூறுகிறான்.

 இந்த வசனம் அற்புதமான கருத்துக்களை முன்வைக்கின்றது. இதற்கு விளக்கம் கூறும் கலாநிதி முஸ்தபா சிபாஈ அவர்கள்,'ஜிஹாதின் நோக்கம் தேவாலயத்தின் இடிபாடுகள் மீது பள்ளிவாசல்களை அமைப்பதல்ல, மாறாக தேவாலயத்துக்குப் பக்கத்தில் பள்ளிவாசலை அமைப்பதாகும்' என்கிறார். ஸையித் குதுப் இவ்வசனத்தை விளக்குகையில் 'மேற்படி குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வின் நாமம் அதிகம் உச்சரிக்கப்படும் பள்ளிவாசல்களைப் போலவே ஏனைய சமயத்தவரது வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. பள்ளிவாசல்களைப் பற்றி குறிப்பிடுவதற்கு முன்னரே பிற வழிபாட்டுத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அவற்றின் மீது அத்துமீறுவதை தடுப்பதை வலியுறுத்துவதாகும். அப்படியாயின் இது அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை நிச்சயப்படுத்த விடுக்கப்படும் அழைப்பாகும். இஸ்லாம் அதனைப் பின்பற்றுவோருக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை விரும்பாமல் தன்னுடன் முரண்பட்டுள்ள மதங்களைச் சார்ந்தோருக்கும் அதனை நிச்சயப்படுத்துகிறது. மேலும் இந்த உரிமையை சகலருக்கும் பெற்றுக் கொடுக்க அதற்காகப் போராடும் படியும் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்துகிறது. இந்தக் கொடியின் கீழ் போராட அவர்களுக்கு அனுமதிக்கிறது. இதன் மூலம் அது தன்னை ஒரு சுதந்திரமான சர்வதேச உலக ஒழுங்கு என்பதை வலியுறுத்துகிறது' என்கிறார். 

 முஸ்லிம்கள் பிற நாடுகளை வெற்றி கொண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களது மத உரிமைகளுக்கு பூரண உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்கள். அதற்கான பல சான்றுகள் இருப்பினும் அவற்றில் ஒன்றை குறிப்பிடலாம். 

  உமர்(ரலி) அவர்களது கிலாபத்தின் போது ஜெரூஸலம் கைப்பற்றப்பட்டபோது அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு அவர்கள் வழங்கிய உத்தரவாதம் வருமாறு:-

 'இது விசுவாசிகளின் தலைவர் உமர், ஈலியா மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பாகும். அவர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்களது மார்கத்தின் ஏனையவற்றுக்கும் அவர் பாதுகாப்பு வழங்கியுள்ளார். அவர்களது தேவாலயங்களில் எவரும் குடியிருக்கலாகாது. அவை இடிக்கப்படலாகாது. கட்டங்களின் பகுதிகள் குறைக்கப்படலாகாது.அவற்றிற்குரிய காணிகளோ சிலுவைகளோ அவர்களது செல்வங்களோ குறைக்கப்படலாகாது. அவர்களது மார்க்கத்திலிருந்து வெளியேறும் படி அவர்கள் பலாத்காரப்படுத்தப்படமாட்டார்கள்.' (இப்னு ஹிஷாம்-சீரத்துன் நபி 4:181) 

 முஸ்லிம்கள் புதிதாக வெற்றிகொண்டு ஆட்சி நடத்திய எகிப்து, லிபியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளாக இருக்கட்டும், இந்தியா, ஸ்பெய்ன், இந்தியா,ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளாக இ;ருக்கட்டும்  அவற்றில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் அல்லாதவர்கள் வாழ்ந்து வருவதாயின் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் இன்றும் பாதுகாப்பாக இருப்பதுடன் அவற்றில் வழிபாடுகளும் நடந்து வருவதாயின் அது இஸ்லாத்தின் மத சகிப்புத் தன்மைக்கான(சுநடபைழைரள வுழடநசநnஉந)ஆதாரங்களாகும்.

  ஆனால், வரலாற்றில் ஒரு சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லது தளபதிகள், தனிமனிதர்கள் பிற மத ஆலயங்களுக்கு ஊறு விளைவித்திருந்தால் அதனை வைத்து இஸ்லாத்தை எவரும் மதிப்பீடு செய்வது முறையல்ல.பாமியான் புத்தர் சிலை விவகாரமும் அப்படித்தான் நோக்கப்படவேண்டும் அது அவரவரது தனிப்பட்ட முடிவுகளாகவே பார்க்கப்பட வேண்டும். தலதா மாளிகையை சிலர் தாக்கினார்கள் என்றால் அவ்வாறு தாக்கியவர்கள் சார்ந்திருக்கும் அவர்களது மதம்தான் அவர்களை அதற்காகத் தூண்டியது என எவரும் பார்க்கலாகாது. அந்த மதங்களது வேதங்கள் அப்படிச் செய்யும்படி கூறியுள்ளனவா என்பதையே பார்க்க வேண்டும். 

 அந்தவகையில், இஸ்லாம் பிறருக்கான மத சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிப்பது டன் நிறுத்தாமல் மதக்கிரியைகள் கூட அச்சமற்ற, சுதந்திரமான சூழலில் மேற்கொள்ளப்பட இடமளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதற்காக ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

  வரலாற்றுத் தவறுகள்

 எனவே, ஒரு காலத்தில் தலதா மாளிகையின் மீதும் சிரீ மகாபோதியின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முதல் புத்தகயாவிலுள்ள பௌத்தர்களது புனிதத்தலத்தின் மீதான தாக்குதல்கள், கிறிஸ்தவ தேவாவலயங்கள் மீதான தாக்குதல்கள் வரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவற்றை யார் எந்த நோக்கங்களோடு செய்திருந்தாலும் அவை மகா பெரும் தவறுகளாகும். அதேவேளை வடக்கு கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பல பள்ளிவாயல்களும் விகாரைகளும் கோயில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட காரணமாக பலர் அமைந்தனர். இது இஸ்லாம் கூறும் யுத்த தர்மத்துக்கு முரணான செயலாகும். 

 பள்ளிவாயல்கள் பற்றிப் பேசும் போது புலிகள் பள்ளிவாயல்களை சேதப்படுத்தியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. பள்ளிவாயல்களுக்குள் தொழுதுகொண்டிருந்த நிராயுத பாணிகளைக் கூட கொன்றார்கள். இது புலிகள் தரப்பினர் செய்த கண்டிக்கத்தக்க செயலாகும். 

 அதேவேளை, அண்மைக்காலமாக முஸ்லிம்களது பள்ளிவாயல்களும் தாக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பமாக அனுராதபுர ஸியாரமும், தம்புள்ளை, கேகாலை, மஹியங்கனை போன்ற பல இடங்களிலுள்ள பள்ளிவாயல்களும் திட்டமிடப்பட்ட குழுக்களால் தாக்கப்பட்டன. மஹிங்கணைப் பள்ளிவாயலுக்குள் முஸ்லிம்கள் உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றியின் உடற்பாகங்கள் போடப்பட்டமை மத வைராக்கியத்தின் உச்ச நிலைக்கு ஆதாரமாகும்.

   முஸ்லிம்களது தனித்துவங்களாகவும் வரலாற்றுத் தொன்மைக்கு சான்றாக உள்ள அடையாளச் சின்னங்களாகவும் இருக்கும் பள்ளிவாயல்கள் மீதான இந்த அத்துமீறல்களை அவர்கள் தமது உயிர்கள், உடைமைகள் மீதான தாக்குதலை விட கொடூரமானவையாகவே கணிக்கிறார்கள். மியன்மாரிலும் பிரித்தானியாவிலும் உள்ள பள்ளிவாயல்கள் தாக்கப்படும் அல்லது தீக்கிரையாக்கப்படும் காட்சிகளை முஸ்லிம்கள் பார்க்கும்போது அது அவர்களது உள்ளங்களுக்கு தீ மூட்டப்படுவதாக உணருகிறார்கள். 

 மனித விழுமியங்களும் பள்ளிவாயல்களும்

  முஸ்லிமின் வாழ்வோடு பள்ளிவாயல்கள் பின்னிப் பிணைந்தவை. ஐவேளை தொழுகையை ஒரு முஸ்லிம் பள்ளிவாயலில் நிறைவேற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் முஸ்லிம் சமூத்தின் இதயங்களாகவும் பல்துறை சார்ந்த நடவடிக்கைகளின் மத்திய எவரும் பார்க்கலாகாது. அந்த மதங்களது வேதங்கள் அப்படிச் செய்யும்படி கூறியுள்ளனவா என்பதையே பார்க்க வேண்டும். 

 அந்தவகையில், இஸ்லாம் பிறருக்கான மத சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிப்பது டன் நிறுத்தாமல் மதக்கிரியைகள் கூட அச்சமற்ற, சுதந்திரமான சூழலில் மேற்கொள்ளப்பட இடமளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதற்காக ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

  வரலாற்றுத் தவறுகள்

 எனவே, ஒரு காலத்தில் தலதா மாளிகையின் மீதும் சிரீ மகாபோதியின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முதல் புத்தகயாவிலுள்ள பௌத்தர்களது புனிதத்தலத்தின் மீதான தாக்குதல்கள், கிறிஸ்தவ தேவாவலயங்கள் மீதான தாக்குதல்கள் வரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவற்றை யார் எந்த நோக்கங்களோடு செய்திருந்தாலும் அவை மகா பெரும் தவறுகளாகும். அதேவேளை வடக்கு கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பல பள்ளிவாயல்களும் விகாரைகளும் கோயில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட காரணமாக பலர் அமைந்தனர். இது இஸ்லாம் கூறும் யுத்த தர்மத்துக்கு முரணான செயலாகும். 

 பள்ளிவாயல்கள் பற்றிப் பேசும் போது புலிகள் பள்ளிவாயல்களை சேதப்படுத்தியதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. பள்ளிவாயல்களுக்குள் தொழுதுகொண்டிருந்த நிராயுத பாணிகளைக் கூட கொன்றார்கள். இது புலிகள் தரப்பினர் செய்த கண்டிக்கத்தக்க செயலாகும். 

 அதேவேளை, அண்மைக்காலமாக முஸ்லிம்களது பள்ளிவாயல்களும் தாக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பமாக அனுராதபுர ஸியாரமும், தம்புள்ளை, கேகாலை, மஹியங்கனை போன்ற பல இடங்களிலுள்ள பள்ளிவாயல்களும் திட்டமிடப்பட்ட குழுக்களால் தாக்கப்பட்டன. மஹிங்கணைப் பள்ளிவாயலுக்குள் முஸ்லிம்கள் உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றியின் உடற்பாகங்கள் போடப்பட்டமை மத வைராக்கியத்தின் உச்ச நிலைக்கு ஆதாரமாகும்.

   முஸ்லிம்களது தனித்துவங்களாகவும் வரலாற்றுத் தொன்மைக்கு சான்றாக உள்ள அடையாளச் சின்னங்களாகவும் இருக்கும் பள்ளிவாயல்கள் மீதான இந்த அத்துமீறல்களை அவர்கள் தமது உயிர்கள், உடைமைகள் மீதான தாக்குதலை விட கொடூரமானவையாகவே கணிக்கிறார்கள். மியன்மாரிலும் பிரித்தானியாவிலும் உள்ள பள்ளிவாயல்கள் தாக்கப்படும் அல்லது தீக்கிரையாக்கப்படும் காட்சிகளை முஸ்லிம்கள் பார்க்கும்போது அது அவர்களது உள்ளங்களுக்கு தீ மூட்டப்படுவதாக உணருகிறார்கள். 

 மனித விழுமியங்களும் பள்ளிவாயல்களும்

  முஸ்லிமின் வாழ்வோடு பள்ளிவாயல்கள் பின்னிப் பிணைந்தவை. ஐவேளை தொழுகையை ஒரு முஸ்லிம் பள்ளிவாயலில் நிறைவேற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் முஸ்லிம் சமூத்தின் இதயங்களாகவும் பல்துறை சார்ந்த நடவடிக்கைகளின் மத்திய தளமாகவும் கணிக்கப்படுகின்றன. அங்கு முழுக்க முழுக்க மனிதனின் ஆன்மீக, ஒழுக்க மேம்பாம்பாட்டுக்கான போதனைகளும் கிரியைகளும் மாத்திரமே நடைபெறுகின்றன. கடும்போக்குக் கொண்டவர்களைக்கூட நிதானப்படுத்தும் இடங்களாக பள்ளிகள் திகழ்கின்றன. 

 பள்ளிகள் என்பவை இழி குணங்கள் கொண்டவர்களை மகத்தான குணநலன்கள் கொண்டவர்களாக மாற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்டன. 'நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தடுக்கும';. (29;:45) என பள்ளிக்குள் இடம்பெறும் பிரதானமான கிரியையான தொழுகையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். மற்றுமொரு கிரியையான 'திக்ர்' எனப்படும் இறை தியானம் பற்றிக்கூறும் போது 'அறிந்து கொள்ளுங்கள் இறை தியானம்(ஞாபகமூட்டலின்)மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன'.(13:28)எனக் கூறுகிறான்.

 பள்ளிவாயல்களில் ஏழை எளியவர்களது துயர் துடைக்க உதவும் 'சகாத்'; எனப்படும் பணத்தின் மீதான கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதன் பலாபலன் பற்றி அல்லாஹ் குர்ஆனில் 'நீங்கள் அவர்களது செல்வத்திலிருந்து அவர்களது தர்மப் பணத்தை பிரித்து எடுங்கள். அதன் மூலம் நீங்கள் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுத்தப்படுத்துகிறீர்கள்.அதன் மூலம் நீங்கள் அவர்களை தூய்மைப்படுத்துகிறீர்கள் ';.(9: 103) எனக் குறிப்பிடுகிறான்.

 எனவே, பள்ளிவாயல்களுக்குள் இடம்பெறும் வழிபாடுகளும் கிரியைகளும் மனிதர்களைப் பாவங்கள், மனித விரோதச் செயல்களில் இருந்து தூரமாக்குகின்றன. உள்ளத்தில் நிம்மதியைத் தோற்றுவிக்கின்றன. உள நோய்களான அகம்பாவம், கஞ்சத்தனம் போன்றவற்றிலிருந்து ஆத்மாவைப் பாதுகாக்கின்றன.எனவேதான் முஸ்லிம்கள் தாம் போய் குடியமரும் இடங்களிலெல்லாம் பள்ளிகளை அமைத்துக் கொள்கிறார்கள். 

 அகற்றப்படவேண்டியவை ஆலயங்களா?

   எனவே, இப்படியாக போற்றத்தக்க கைங்கரியங்களுக்கு காரணமாக அமையும் புனிதஸ்தலங்களான பள்ளிவாயல்கள் நிர்மாணிக்கப்பட ஊக்குவிப்பு வழங்கப்படவேண்டுமே தவிர அவை அகற்றப்படக்கூடாது.அகற்றப்படவேண்டியவை பள்ளிவாயல்களோ ஆலயங்களோ அன்றி மனிதர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு தூண்டுதலாக அமையும் இடங்களான மதுபான சாலைகளும், சூதாட்ட விடுதிகளும், ஆபாச சினிமாக் கொட்டகைகளுமாகும். அவற்றால் கொலைகள் இடம்பெறுகின்றன. உடல் நலத்துக்கு கேடு விளைகிறது, குடும்பங்கள் சிதைவடைகின்றன. பாலியல் வக்கிரங்கள் நடக்கின்றன. பொருளாதாரம் குட்டிச் சுவராகின்றது. 

  எனவே, மனிதர்களின் ஆன்மிக விமோசனத்துக்கும் விழுமியங்களது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கன. அவற்றைச் செய்பவர்கள் நிச்சயமாக எந்தவொரு மதத்தையும் மிகச்சரியாக விசுவாசித்தவர்களாக இருக்க முடியாது. அவர்களது உள்நோக்கங்கள் நல்லவையாக இருக்க நியாயமில்லை.சுயநலன்களுக்காக மதக்குழுக்களை மோதவிட்டு தத்தமது இழிவான இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிப்பவரகள் தாம் மகா பெரிய தவறுகளை செய்துகொண்டிருப்பதை உணர வேண்டும்.  நாட்டில் சௌஜன்யமும் சமாதானமும் நிலவ வேண்டுமாயின் சகல மதத்தவரதும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறுதியாக, 

  அதேவேளை, ஒவ்வொரு மதத்தையும் அனுஷ்டிப்பவர்கள் தத்தமது மதக்கிரியைகளை பிறருக்குத் தொந்தரவாகவும் அமைத்துக்கொள்ளலாகாது.குறிப்பிட்ட ஓர் இடத்தில் பள்ளிவாயலொன்றை அமைப்பதற்கு முன்னர் அந்த இடத்திற்கு அது தேவை தானா என்பதை நன்கு சிந்தித்த பின்னரே முடிவெடுக்கவேண்டும்.ஓலி பெருக்கிகளை பாவிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்களும் கூட இவ்வகையில் கண்டிக்கத்தக்கவையாகும்.

 இந்த இழிபறிகளையும் பதட்ட நிலைகளையும் களைந்து சுமுகமான ஒரு சூழலை உருவாக்குவது காலத்தின் அவசியத்தேவையாகும். இதற்காக மதத்தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதிகாரங்களில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். காலம் கடந்த ஞானமோ அசமந்தப் போக்கோ பாரிய விளைவுகளையே தோற்றுவிக்கும். 

 பல நிறங்களைக் கொண்ட மலர்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் பூந்தோட்டம் போல் பல்லினங்களைக் கொண்ட நாடு அபிவிருத்தியை நோக்கி நகர நாம் ஒவ்வொருவரும் எம் பங்களிப்பை நல்குவோமாக!

1 comment:

  1. We may expect actions against anti religious activity from authority close to the forthcoming election. If it so, we have to use our votes as a punishment. NOW is the time to act by government if they really want the winning votes!

    ReplyDelete

Powered by Blogger.