Header Ads



மின்சாரத்தினால் ஆன வீதி - பஸ் ஓடும்போது மின்சாரம் சார்ஜ் ஆகும்.

தென் கொரியாவில் மின்சாரத்தினால் ஆன ரோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது பஸ் ஓடும்போது மின்சாரம் சார்ஜ் ஆகும்.

தென் கொரியாவில் அதி நவீன முறையில் மின்சாரத்தினால் ஆன ரோடு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டில் மண்ணில் காந்த அலையுடன் கூடிய மின்சார கேபிள் புதைக்கப்பட்டுள்ளது.

அதன் மீது பயணம் செய்யும்போது மண்ணில் புதைக்கப்பட்ட மின் கேபிள் மூலம் பஸ்சின் பேட்டரியில் மின்சாரம் சார்ஜ் ஆகும். இதன் மூலம் பஸ் இயங்கும்.

இந்த ரோட்டில் பயணம் செய்யும் வகையில் ஹைடெக் வசதியுடன் கூடிய பிரத்யேக பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

தற்போது 2 பஸ்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன பஸ்கள் ஓடும்போது மட்டுமின்றி நிற்கும் போதும் பேட்டரியில் சார்ஜ் செய்ய முடியும். அதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இன்டாங் மாவட்டத்தில் குமி என்ற இடத்தில் 12 கி.மீட்டர் நீளத்துக்கு மட்டுமே மின்சார வசதியுடன் கூடிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரூட்டில் போக வர என 24 கி.மீட்டர் தூரம் இந்த பஸ்கள் இயங்க உள்ளன.

No comments

Powered by Blogger.