Header Ads



6 மாதங்களில் 216 புதிய பள்ளிவாசல்கள் திறந்துவைப்பு - கட்டார் ஈத் நிறுவனம் சாதனை

மு.உ.

இவ்வருட ஜனவரி முதல் ஜூன் வரையான முதல் அரையாண்டு காலப்பகுதியில், கட்டாரின்  செய்க் ஈத் சமூகசேவை நிறுவனம் வெளிநாடுகளில் 216 பள்ளிவாசல்களை திறந்துள்ளது.

இப்பள்ளிவாசல்களை அமைப்பதற்காக இந்நிறுவனம் 16 மில்லியன் கட்டார் ரியால்களை செலவிட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் மேலும் 241 பள்ளிவாசல்களை கட்டுவதற்கு செய்க் ஈத் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கட்டார் செய்தி நிறுவனமொன்று தெரிவிக்கின்றது.

சூடான்,சோமாலியா,ஈராக், யெமன், இந்தியா, பஹ்ரைன், நைஜர், யெமன்,இந்தோனேசியா, பாகிஸ்தான், கோஸோவோ, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, டோகோ, கொமரூஸ், கானா,பலஸ்தீன், கென்யா, மாலி, முர்தானியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் கட்டாரின் செய்க் ஈத் நிறுவனத்தின் ஊடாக பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டதாக செய்க் ஈத் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவின் தலைவர் அலி பின் காலித் அல்ஹஜ்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பள்ளிவாசல்கள் அமைப்பதன் மூலம் அந்நாட்டு மக்களின் தேவைகள் மதிப்பீடு செய்துகொள்ளமுடியம் எனவும் காலித் அல்ஹஜ்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.