என் குழந்தை உணவுக்காக அழுது கொண்டே இருக்கிறது...
"என் குழந்தை உணவுக்காக அழுது கொண்டே இருக்கிறது. இரவில் நான் ஒரு ரொட்டித் துண்டை அவன் பக்கத்தில் வைத்திருக்கிறேன். என் குழந்தைகள் பசியால் இறந்துவிடுவோமோ என்று நான் அஞ்சுகிறேன்," என்று அல்-நுசீராத் முகாமில் ஐந்து குழந்தைகளின் தாயான 27 வயது ஹனா அல்-தவீல் தெரிவிததுள்ளார்.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவளுடைய குழந்தை வளர்ச்சி குன்றியதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். "என் மற்ற குழந்தைகளைப் போல அவன் நடக்கவோ பேசவோ இல்லை," என்று அவள் மேலும் சொன்னாள்.
கான் யூனிஸுக்கு இடம்பெயர்ந்த மற்றொரு தாயான நூர்ஹான் பரகாத், ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. "தாய்ப்பால் கொடுப்பது என் குழந்தையுடன் பிணைப்பை உருவாக்குகிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு உணவு இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்?"
அக்டோபர் 2023 இல் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து குறைந்தது 66 பாலஸ்தீன குழந்தைகள் ஏற்கனவே பசியால் இறந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு தினமும் சுமார் 112 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகக் கூறுகிறது. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிரந்தர வளர்ச்சி சேதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
பாலஸ்தீன-ஜெர்மன் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டயானா நஸ்ஸல், “குழந்தைகளுக்கான பால்மா இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு என்ன செய்யப் போகிறது? குழந்தைகளுக்கு பால்மாவை உணவாக வழங்குவதில் இருந்து நாங்கள் தடுக்கப்படுகிறோம்” என்றார்.
Post a Comment