விமானத்திற்குள் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட துணை விமானி - UAE சட்டமா அதிபர் அறிவிப்பு
📌 '(Flight Dubai) விமானத்தின் 'FZ 1073' என்ற பயணத்தின்போது, விமானத்தின் துணை விமானி ஒரு "பயங்கரவாதச் செயலில்" ஈடுபடத் தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல்-ஷம்சி அறிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
📌 விசாரணையின்படி, துணை விமானி விமானி அறையில் (cockpit) இருந்த அவசரக்காலப் பயன்பாட்டிற்கான கோடரியைப் பயன்படுத்தி விமானியைத் தாக்கியதாகவும், விமானத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
📌 தொழில்நுட்பச் சோதனைகள் மற்றும் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்வதுடன், இச்சம்பவம் தொடர்பான சூழல்கள், நோக்கங்கள் மற்றும் தொடர்புகளைக் கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அரசு வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment