Header Ads



இலவசமாகச் செய்து முடிப்பார்கள்..



இந்தியப் பைலட் கதாநாயகனாக மிளிர்ந்த செய்தியை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். அவர்தான் விமானத்தைத் தரையிறக்கினார் என்பதில்லை; எனினும், தாக்குதலின் நடுவே காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததே கேப்டன் ஸ்மித்தை ஒரு கதாநாயகனாக உருவெடுக்க வைத்தது,  நன்று.


இதனைத் தொடர்ந்து, பயணிகளில் ஒருவரான சாதாரணப் பிளம்பர் ஒருவர் முன் வந்து, கட்டுப்பாட்டுக் கருவிகளைச் செயல்படுத்தி, தலைகுப்புற வீழத் தொடங்கிய விமானத்தைச் சீர்படுத்துகிறார். 


(இதெல்லாம் இவ்வளவு எளிதான காரியமா என்ன!?)


அவரை துபாய் ஆட்சியாளர் நேரில் வந்து கட்டிப்பிடித்துப் பாராட்டினாலும், அவருக்குப் பெரியளவில் கதாநாயகப் பிம்பம் எதுவும் கட்டியெழுப்பப்படவில்லை.


இதற்குப் பிறகுதான், பயணிகளாக வந்திருந்த வேறு இரண்டு பைலட்டுகள் காக்பிட்டுக்குள் நுழைந்து, விமானத்தின் முழுத் தன்மையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதனைப் பத்திரமாகத் தரையிறக்குகிறார்கள்... (என்ன நடந்ததோ தெரியவில்லை...!)

ஆனால், அந்த இருவரின் பெயர்களையாவது எவரேனும் அறிவாரா!? 🤔 அவர்களை என்ன அற்பப் பொருளாகவா கருதிவிட்டார்கள்? கதாநாயகப் பிம்பம் ஒருபுறமிருக்க, அவர்களின் பெயர்கள்கூட எங்குமே குறிப்பிடப்படவில்லை.


தொடக்கத்திலேயே இந்தியரை மட்டும் முன்னிலைப்படுத்தி செய்திகளைப் பரப்புவது ஏன்? ஏனெனில், ஒரு இந்தியன் "கதாநாயகன்" ஆகும் கதைக்களம் வெறும் வீர வரலாறாக மட்டும் இங்கு முடிந்துவிடுவதில்லை. மறுபுறம் ஒரு முஸ்லிம் 'வில்லனாகச்' சித்தரிக்கப்பட்டால், நச்சுப் பிரச்சாரத்திற்குத் (Propaganda) தேவையான அனைத்துக் மூலப்பொருள்களும் முழுமையடைந்துவிடுகின்றன. இதைக் கண்டு நமது சங்கி மற்றும் கிரிசங்கி பிரிவினர் பேரானந்தத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள்...


நச்சுப் பிரச்சாரத்தின் ஆகப்பெரிய பலமே அதை உருவாக்குபவர்கள் அல்ல... அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அடுத்தவருக்குக் கொண்டு சேர்க்கும் சுயசிந்தனையற்ற மனிதர்கள்தான். தற்சமயம் அது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. கோடிக்கணக்கான கூலியற்ற அடிமைகளின் உழைப்பு சாதாரண விஷயமல்ல!! இவர்களை இடையிடையே சற்று உற்சாகப்படுத்த ஆகும் செலவு மட்டும்தான்... எஞ்சிய வேலையை முழுவதுமாக அவர்களே இலவசமாகச் செய்து முடிப்பார்கள். 


Saira Sabah 

No comments

Powered by Blogger.