Header Ads



முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும்..


முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் பொலிஸ்மா அதிபராக இருந்தாலும் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது நாட்டில் முன்னர் பிரபல நபர்களைப் பார்த்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலமும், பக்கச்சார்பாகச் செயற்பட்ட காலமும் இருந்தது.


எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம். நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.