Header Ads



பாரிய முறைப்பாடு


இலங்கையின் மிகவும் பிரபலமான பாடகர்களான பாத்திய ஜயக்கொடி மற்றும் சந்துஷ் வீரமன் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் பாரிய முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் மூலம் பெறப்படும் பெருமளவிலான வருமானத்தை முறையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தாமல், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வரி பணத்தை நீண்டகாலமாக செலுத்தாமல் தவிர்த்து வருவதாக அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.