அனோஜன் மரண தண்டனை, மோடியின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராஜா அனோஜன் அவர்களின் விடுதலை அல்லது தண்டனைக் குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய மனிதாபிமானத் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. நடராசா ரவிகுமார் அவர்களும், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமும் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு. திருமேனி யோகநாயகன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் முக்கிய கட்டமாக, இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்களிடம் விசேட கோரிக்கை மனு கையளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment