துறவறம் என்பது அச்சுறுத்துவதற்கான, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையோ அல்ல
துறவறம் என்பது எந்த நேரத்திலும் மற்றவர்களை அச்சுறுத்துவதற்கோ, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையோ அல்ல என வக்கமுல்லே உதித்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசாரர் சிறையில் அடைக்கப்பட்டதையும், அவர் சிறை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவத்தையும் சில அரசியல் குழுக்கள் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பின்படியே தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஞானசார தேரரைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை நேரடியாக விவாதிக்காமல், அங்கியைக் களைந்த சம்பவத்தை ஒரு அரசியல் முழக்கமாக மாற்றுவதன் மூலம் சில கட்சிகளின் அரசியல் நோக்கங்கள் செயல்படுத்தப்படுகின்றன,
தாய்லாந்திற்குச் சென்றிருந்த பிக்குகள் குழு சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியுடன் விவாதித்ததை நினைவு கூர்ந்த வக்கமுல்லே உதித தேரர், தற்போதைய பிரச்சினைக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment