நீதிபதி திலின கமகே பதவி நீக்கம் - சகல குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிப்பு
மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்கனவே அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பதவியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.

Post a Comment