Header Ads



ரியாத் நகருக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்


சவூதி  ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.


இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையிலிருந்து தொடர்புகொள்வதாயின் 1979 என்ற இலக்கத்திற்கும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்திற்கும், WhatsApp செய்திகளுக்கு மட்டும் +94 74 444 1979 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும்.


இதுதவிர, உங்களது பயண முகவர் (Travel Agent) மூலமாகவோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்றோ தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. See less

No comments

Powered by Blogger.