Header Ads



ஞானசாரர் அநியாயமாக கைது - மகிந்த குடும்பம் பழிவாங்கப்படுகிறது


நாட்டில் தீவிரவாதம் குறித்து முதன்முதலில் எச்சரித்தவர் ஞானசார தேரர் என்றும், அவரது கூற்றை அன்றே கவனத்தில் எடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். அவ்வாறான ஒரு பௌத்த துறவியை அநியாயமாகக் கைது செய்து, அவரது சீவரத்தை அகற்றியிருப்பது மிகவும் ஆபத்தான மற்றும் கண்டிக்கத்தக்க செயலாகும்.


தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்படுகிறது.


போரை வெற்றி பெற்று நாட்டிற்குப் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் கைதுகளும் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகளாகும்.


- சரத் வீரசேகர -

No comments

Powered by Blogger.