"கர்மா" என எண்ணி திருப்தி அடைகிறேன்...
ஞானசாரர், வரலாறு முழுக்க, இந்நாட்டு இன நல் உறவு (தமிழ் - சிங்கள, முஸ்லிம் சிங்கள) கொள்கைக்கு எதிராக பாரிய குற்றங்களை புரிந்துள்ளார். ஆனால், இப்போது இவர் கைதாகி இருப்பது அதற்காக அல்ல. ஆனாலும், "கர்மா" என எண்ணி திருப்தி அடைகிறேன்.
இதற்காக, எப்போதும் "பழி வாங்கும்" சிந்தனையில் நின்று விட நான் தயார் இல்லை. "அப்படி இருக்காதீர்கள்" என தமிழ் மக்களிடம் கூறுகிறேன்.
"சிங்கள-பெளத்த தேசிய வாதம்" சமரசத்துக்கு தயாராக இருக்கிறதா என எப்போதும் நாம் தேட வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் சாத்தியங்களை தேடுவேன்.
ஏனென்றால், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழாமல், இந்நாட்டுக்கு உள்ளே வாழும் நாம் சிங்கள மக்களுடன்தான் கூடி வாழ வேண்டும். நாம் அப்படிதான் வாழ்கிறோம்.
தமிழ், பேசும் மக்கள், சிங்கள மக்களுடன் "உரிமைகளின் சமத்துவம்" அடிப்டையில், இலங்கையிலே வாழ்வதற்கு, "பழி-வாங்கல்" சிந்தனைக்கு அப்பால் சிந்திக்க நாம் பழக வேண்டும். நியாயமான நிரந்தர அரசியல் தீர்வை தரும் புதிய அரசியலைமைப்பை கோர வேண்டும்.
159 பெரும்பான்மை கொண்ட அனுர அரசு இதை செய்ய வேண்டும். இனி ஒரு சந்தர்ப்பம் வரலாற்றில் வராது. ஆனால், இதை செய்ய அரசு இரண்டு வருடங்களாக தயங்குகிறது. கைது நடவடிக்கைகள் மூலம் மட்டும் மக்களை குஷி படுத்த விரும்புகிறது.
இந்த எதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நிரந்தர தீர்வை தரும் புதிய அரசியலமைப்பை வலியுறுத்த வேண்டும்.
மனோ கணேசன் Mp

Post a Comment