இந்த மாதம் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் நட்டம் ஏற்படுவதாகக் கூறி, தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளும் 'எரிபொருள் இல்லை' என்ற பதாதைகளும் காணப்படுகின்றன.
ஒப்பந்தங்களின்படி குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுமாறு தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Post a Comment