Header Ads



ருஹுணு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்


 ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, கற்றல் நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு கல்விச் சபை தீர்மானித்துள்ளது.


இதன் காரணமாக, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்ந்த பெரும்பாலான மாணவர்களை இன்று பிற்பகல் வீடுகளுக்கு அனுப்புவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பல மாணவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையில், நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், பல்கலைக்கழக மருத்துவச் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.