Header Ads



ஏக்கம் போக்க ஒரு ஜமாஅத் நிர்வாகமே, பொறுப்பெடுத்து செயல்படுத்துகிறது.


 ஆண்டுதோறும் அதிகரித்து வரும்  ஹஜ் பயணம் செலவினங்களால்  மக்கா, மதீனா புனித தலங்களை  வாழ்நாளில் ஒரு முறையாவது தவாஃப்  செய்வதற்கு ஏங்குபவர்களின் ஏக்கம் போக்க ஒரு ஜமாஅத் நிர்வாகமே பொறுப்பெடுத்து செயல்படுத்துகிறது.


இந்தியா எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகில் தெற்கு வல்லம் ஜமாஅத் நிர்வாகம் இந்த அற்புதமான உம்ரா பயண திட்டத்தை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து வருகிறது.


தங்கள் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் வசிக்கும் மஹல்லாவாசிகளில்  ஐம்பது வயது கடந்த ஆண், பெண்கள்  லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் உம்ரா செல்வதற்கு உதவும் வகையில் 

"ஒருமையில் ஒரு உம்ரா"  திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.


"ஒருமையில் ஒரு உம்ரா" திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்த ஜமாஅத்தில் தனியாக ஒரு கமிட்டி இயங்குகிறது. உம்ரா பயணம் செல்வதற்கு ஆகும் செலவினம் ஒரு லட்சம் ரூபாய் மொத்தமாக ஒரேயடியாக எடுக்க வாய்ப்பில்லாத மஹல்லாவாசிகள்  வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தங்களால் இயன்ற தொகை இந்த திட்டத்தில் கமிட்டியில் செலுத்தலாம்.


ஒரு வருடம் சேகரிக்கப்பட்ட தொகை கணக்கெடுக்கப்பட்டு மீதமுள்ள தொகை அந்த ஊரில் உள்ள நல்லுள்ளம் படைத்த செல்வந்தர்கள் பகிர்ந்து கொள்ள ஏழைகளின் உம்ரா கனவு நனவாகிறது.


"ஒருமையில் ஒரு உம்ரா" திட்டத்தின் கீழ்  இந்த வருடம் ஆண்களும் பெண்களும் 74பேரடங்கிய குழுவினர் மஹல்லா மக்கள் ஒருங்கிணைந்து துஆ செய்து வழியனுப்ப கஃபாவை தவாஃப் செய்யப்போகும் ஆவல் மேலிட உம்ரா பயணம் புறப்பட்டது நெகிழ்வான காட்சி.


நம்மிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை  ஹஜ் செய்தவர்கள், நினைத்த நேரத்தில் உம்ரா பயணம் புறப்படுபவர்கள்  தங்கள் குடும்பத்தில், நெருங்கிய உறவில் இது போன்ற ஏக்கத்துடன் வாழ்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒருமுறை உம்ரா சென்று வருவதற்கு அனுப்பி வைக்க முயல வேண்டும்.

Colachel Azheem

No comments

Powered by Blogger.