முஸ்லிம்களுக்கு ஏன் இந்த புறக்கணிப்பு...?
இனவாதம் இல்லையா? அப்படியானால் முஸ்லிம்களுக்கு ஏன் இந்த புறக்கணிப்பு? இவை அனைத்தும் வெறும் தற்செயல்களா? அல்லது முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக ஓரங்கட்டும் ஒரு புதிய அணுகுமுறையா? அரசாங்கம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
முஸ்லிம்களுக்கு அரசாங்கத்திடம் வேண்டியது எந்தவொரு விசேட சலுகையும் அல்ல.
சம உரிமை.
சம பிரதிநிதித்துவம்.
சமமான நீதி.
சமமான மரியாதை.
அரசாங்கம் உண்மையில் இனவாதத்திற்கு எதிரானது என்றால், அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. இல்லையென்றால், “இனவாதம் இல்லை” என்ற அரசாங்கத்தின் வார்த்தைகளுக்கும், முஸ்லிம் சமூகத்தின் அனுபவத்திற்கும் இடையிலான முரண்பாடு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும்.
(ஹிதாயத் சத்தார்)

Post a Comment