மிகுந்த வேதனையோடு அந்த சிங்க கர்ஜனை
"ஒரு வரலாற்றுச் சான்றாக, மிகுந்த வேதனையோடு இந்த இஸ்லாமியச் சமூகத்தின் தலைவர்களிடம் நாங்கள் இதைக் கேட்கிறோம். அறபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களே!
முஸ்லிம் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களே, அரசியல் கட்சித் தலைவர்களே, அறிஞர்களே, சிந்தனையாளர்களே!
எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்விடம் உங்களுக்கு எதிராக நாங்கள் முறையிடுவோம் (கணக்குக் கேட்போம்). அனாதையாக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்காகவும், பிள்ளைகளை இழந்த ஒவ்வொரு தாய்க்காகவும், வீடுகளை இழந்து நடுத்தெருவில் நின்ற ஒவ்வொரு மனிதனுக்காகவும் உங்களிடம் கேள்வி கேட்கப்படும்.
உங்கள் மௌனத்தால் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இரத்தப் பழி உங்கள் கழுத்துகளைச் சூழ்ந்திருக்கிறது. இந்த புதிய நாஜி சியோனிஸ்டுகள் (பயங்கரவாத இஸ்ரேலிய படைகள்) உங்கள் கண்முன்னே இந்த இனப்படுகொலையை பயமின்றி நடத்துகிறார்கள் என்றால், அதற்கு எந்த எதிர்ப்பும் வராது என்ற தைரியம்தான் காரணம். உங்களின் இந்த அமைதியான ஆதரவை அவர்கள் தங்களுக்கான அனுமதியாக எடுத்துக்கொண்டார்கள்."
— அல்-கஸ்ஸாம் படையின் செய்தித் தொடர்பாளராக இருந்த வீர உயிர் தியாகி அபூ உபைதா (ஹுதைஃபா அல்-கஹ்லூத்) அவர்களின் கடைசி அறிக்கையிலிருந்து.
அந்த சிங்க கர்ஜனையின் முதலாம் வீரமரண நினைவு நாள் 30/08/2026
DrCK Abdulla

Post a Comment