Header Ads



இஸ்ரேல் மக்களை அவர்களின் அரசின், நடவடிக்கைகளுக்காகச் சாடக்கூடாது - அமைச்சர் பிமல்


 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடரும் போர் நிலைமை காரணமாக பொருளாதார மற்றும் பிற விளைவுகளை முழுமையாக தவிர்ப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று -20- நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


“இத்தகைய மோதல்களின் போது மோதல் இடம் பெறும் வலயங்களில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான முனைப்புக்களை எடுப்பது சாத்தியமானததே தவிரர ஏனைய பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், ஈரான்–இஸ்ரேல் மோதல் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்ற அபாயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொள்கலன் போக்குவரத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு,” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா பிரச்சனை மற்றும் ஈரான்–இஸ்ரேல் மோதல் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


“இஸ்ரேலும் பிலஸ்தீனும் தனித்தனி நாடுகளாக காணப்பட்டதாகவும் சில நாடுகளின்அரசியல் நோக்கங்களின் காரணமாக இந்த இரு நாடுகளும் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்றைய உலகில் காசா என்பது மீதமுள்ள கடைசி காலனியாக இருக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இதே நேரத்தில், ஒரு அரசின் நடவடிக்கைகள் காரணமாக அந்த நாட்டின் மக்களை வெறுப்பது தவறானது என அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார்.


“இஸ்ரேல் மக்களை, அவர்களின் அரசின் நடவடிக்கைகளுக்காகச் சாடக்கூடாது. அவர்கள் விரும்பினால், தங்களின் அரசை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் அதிகாரம் அவர்களிடம் உள்ளது,” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.