Header Ads



பாராளுமன்றத்தைக் கூட்டி எதிர்க்கட்சி, தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்



எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தன்னிடம் தருமாறு ஜனசெத பெரமுண கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.


கொழும்பில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 


எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் திறமையானவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.


பொது மக்களின் பிரச்சினைகள், நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குரல் எழுப்ப வேண்டும்.


ஆனால் இன்று அவ்வாறானதொரு எதிர்க்கட்சித் தலைமையொன்று இல்லை. அதன்காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ள பலரும் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.


நாடாளுமன்றத்தைக் கூட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை என்னிடம் தாருங்கள்.


எதிர்க்கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டுமென்று செயல்ரீதியாக நான் நிரூபித்துக் காட்டுகின்றேன் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.