Header Ads



உயிரைக் கொடுத்து உயிர்களைக் காப்பாற்றிய மஹ்ரீன் ஆசிரியை



வங்கதேசத்தில் நேற்று (21) மதியம் பயிற்சி போர் விமானம் ஒன்று,  பள்ளிக்கூடம் ஒன்றில் நொறுங்கி விழுந்தது தெரிந்ததே. 


இந்தப் பயிற்சி விமானத்தில் விமானியைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. 


விமானம் விழுந்து தீப்பிழம்பாய் வெடித்த போது பள்ளிக் குழந்தைகளுக்கு அரணாக இருந்து அந்த விபத்திலிருந்து பள்ளி பிள்ளைகளைக் காப்பாற்றி இருக்கின்றார் மஹ்ரீன் சௌத்ரி என்கிற 42 வயது ஆசிரியை. 


வேகமாகச் செயல்பட்டு பிள்ளைகளை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றி இருக்கின்றார். இதனால் தீக்காயங்களுக்கு ஆளான நிலையிலும் அந்த வலியிலும் பிள்ளைகளைக் காப்பாற்றுவதிலேயே மும்முரமாக இருந்திருக்கின்றார்.  இறுதியில் தீக்காயங்களால் மயங்கிச் சரிந்திருக்கின்றார். 


மருத்துவமனையில் பல மணி நேர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். 


உயிரைக் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றி உத்தமியை மாணவர்களும் ஆசிரியர்களும் ‘ஹீரோ’ (நாயகி) என்றே கொண்டாடுகின்றார்கள். 


அல்லாஹ் அந்த ஆசிரியையின் பாவங்களை மன்னிப்பானாக. அவருக்கு சுவனத்தின் உயர்ந்த சோலைகளில் சேர்ப்பானாக. ஆமீன்.


(Azeez Luthfullah)

No comments

Powered by Blogger.