Header Ads



முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவல் - 86 கைக்குண்டுகளுடன் மற்றுமொருவர் கைது


வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரால் இன்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பில் நேற்றைய தினம் (21.07) கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் படி வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் படியே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.


இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.


இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளரான 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.