ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால், தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள் ளார்
இந்த நிலையில் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அணுசக்தி திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஏசேதங்கள் ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் எங்களது சொந்த விஞ்ஞானிகளின் சாதனை என்பதால் அணுசக்தி செறி வூட்டலை நாங்கள் கைவிட முடியாது. செறிவூட்டல் என்பது தேசிய பெருமைக்குரிய விஷயம் ஆகும். அதை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது. அது எப்போதும் அமைதியாக இருக்கும் என்பதை நிரூபிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒருபோதும் ஈரான் அணு ஆயுதங்களை நாடாது. அதற்கு ஈடாக, அவர்கள் தங்கள் தடைகளை நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment