Header Ads



இஸ்ரேல் போர், போலித் தகவல்கள் பரப்பும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை


இஸ்ரேல் போர் குறித்து தவறான தகவல்களை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கேட்டுக் கொண்டுள்ளார்.


இஸ்ரேலில் தற்போதைய போர் நிலைமை மற்றும் எதிர்கால சூழ்நிலைகள் குறித்து மிகவும் தவறான தகவல்களை கொண்ட குரல் பதிவுகளை பல இலங்கையர்கள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.


ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தகவல்களை, இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளான PIBA மற்றும் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன.


இதனால் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதையும் நம்புவதையும் தவிர்க்குமாறு, இலங்கையர்களிடம் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.