Header Ads



பாடசாலையில் இருந்து 30 பாம்புக் குட்டிகளும், 55 முட்டைகளும் மீட்பு


குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன.


அதன்படி, அந்தப் பகுதியில் பாம்புகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் மற்றும் ஊழியர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


போகமுவ மத்திய கல்லூரி தற்போது சுமார் 2,000 மாணவர்களுக்கு கல்வி கற்கின்றனர்.


No comments

Powered by Blogger.