Header Ads



பல்டியடித்த மெத்­திகா, எல்­லோரும் ஏசி­னார்கள், இது நான் செய்த வேலையல்ல என்கிறார்


கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வதால் நிலத்­தடி நீரில் வைரஸ் கிரு­மிகள் பரவும் என அன்று பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நிபு­ணத்­துவ குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. என்­றாலும் அவ்­வாறு நிலத்­தடி நீரில் கொவிட் வைரஸ் பர­வாது என பேரா­சி­ரியை நீலிகா மாளவிகே உட்­பட மற்றும் சிலர் வாதிட்டு வந்­தனர்.


உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) படி உல­கெங்­கு­முள்ள 190க்கும் மேற்­பட்ட நாடுகள் கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கும், தகனம் செய்­வ­தற்கும் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் கொவிட் தொற்­றா­ளர்­களின் மர­ணித்த உட­ல்கள் கட்­டா­ய­மாக தகனம் செய்­யப்­பட வேண்­டு­மென்று இலங்கை மிகவும் உறு­தி­யான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்­தது.


கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் நிலத்­தடி நீரில் வைரஸ் கிரு­மிகள் பரவி நோய் தொற்­றுகள் அதி­க­ரிக்கும் என நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விஷேட நிபு­ணத்­துவ குழுவின் சிபா­ரி­சுக்­க­மைய அர­சாங்கம் தகனம் செய்­யப்­பட வேண்­டு­மென்ற உறு­தி­யான கொள்­கையை அமுல்­ப­டுத்­தி­யது.


கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்­பாக சிபா­ரி­சுகள் செய்யும் விஷேட நிபு­ணர்கள் அடங்­கிய குழுவின் உறுப்­பி­ன­ரா­க­வி­ருந்த பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே இன்று இவ்­வி­வ­கா­ரத்­தி­லி­ருந்தும் தப்­பித்­துக்­கொள்ள முயற்­சிக்­கிறார்.


‘‘நிபு­ணத்­துவ குழுவில் வைத்­திய சட்ட அதி­கா­ரிகள் பெரும் எண்­ணிக்­கையில் இருந்­தார்கள். கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்தால் நிலத்­தடி நீர் மூலம் வைரஸ் கிரு­மிகள் பர­வு­வ­தற்கு வாய்ப்­புண்டு என்று அவர்கள் தான் கூறி­னார்கள். அவர்­களின் அதி­க­மா­னோரின் கருத்­து­க­ளுக்கு அமை­வாக நாம் கொவிட் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­படக் கூடாது, எரிக்­கப்­பட வேண்­டு­மென தீர்­மானம் எடுத்தோம். இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டிய நிலைமை எனக்கே ஏற்­பட்­டது. அதனால் என்னை எல்­லோரும் ஏசி­னார்கள். இது எனது தேவைக்­காக நான் செய்த வேலை அல்ல’’ என்று பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே தெரி­வித்­துள்ளார்.


இதே­வேளை கொவிட் தொற்று நோய் நீரினால் பரவும் நோயல்ல என வைரஸ் தொற்று தொடர்­பான விஷேட நிபுணர் பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் 2020இல் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போது குறிப்­பிட்­டி­ருந்­தமை கவ­னத்திற் கொள்­ளத்­தக்­க­தாகும்.

Vidivelli

No comments

Powered by Blogger.