Header Ads



பாலித்தவின் மகன் வெளியிட்டுள்ள தகவல்கள்


மனிதநேயமிக்க அரசியல்வாதியான பாலித தெவரபெரும தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின் மிகவும் எளிமையான வாழ்க்கை முறை குறித்து அவரது மகன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.


வேறு வேலைகளை செய்வதை விட விவசாயத்தில் தங்களை ஈடுபடுமாறு தந்தையான முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


“நாங்கள் வேலை ஒன்றிற்கு சென்று பணி செய்வதை தந்தை உண்மையாகவே விரும்பவில்லை. ஆடம்பரமான வாழ்க்கையை முறையை தாண்டி விவசாயம் செய்து வாழ்வோம் என தந்தை வலியுறுத்தினார்.


விவசாய செய்கை மூலம் பெருமளவில் பணம் கிடைக்காது. அதனைக் கொண்டே தந்தையின் சமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


விவசாயத்தில் சிறிய தொகை பணமே கிடைக்கும். அதில் முழு குடும்பமும் வாழ முடியாது. அம்மாவிடம் இது குறித்து தெளிவுபடுத்திய பின்னர் அனுமதி பெற்று துறைமுகத்திற்கு பணிக்கு சென்றேன்.


அங்கு எனக்கு மாதத்திற்கு 2 நாட்கள் மாத்திரமே விடுமுறை கிடைத்தது. அது அரசாங்க தொழிலாகும். ஆனால் தந்தை கூறும் போது வீட்டிற்கு வந்து செல்வேன்.


பின்னர் தந்தையின் விவசாய ஆசைக்காக அந்த வேலையை விட்டு விலகினேன். நான் அங்கிருந்து விலகும் வரை நான் முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவின் மகன் என்பது யாருக்குமே தெரியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.