Header Ads



டயலொக் - ஏர்டெல் ஒப்பந்தம், வாடிக்கையாளர்களுக்கு பயன் கிட்டுமா..?


இலங்கையின் தொலைத்தொடர்பு இயக்குனரான, டயலொக் ஆக்ஸியாட்டா நாட்டில் பார்தி ஏர்டெல்லின் செயற்பாடுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, நிறுவனங்கள் இரண்டும் உடன்படிக்கையில் இன்று (18.04.2024) வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளன.


இந்த ஒப்பந்தத்தின் கீழ், டயலொக் ஆக்ஸியாட்டா, பார்தி ஏர்டெல்லுக்கு 10.4% பங்குகளை வழங்குவதன் மூலம் Airtel Lankaவின் 100% பங்குகளை கையகப்படுத்தும்.


டயலொக் ஆக்ஸியாட்டா மலேசியாவின் ஆக்ஸியாட்டா குழுமத்திற்கு சொந்தமானது என்பதோடு ஏர்டெல் லங்கா என்பது இந்தியாவின் பார்தி ஏர்டெல்லின் இலங்கைப் பிரிவாகும்.


இந்நிலையில், இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்கு இடமாற்றம் ஒரு சுயாதீன அமைப்பால் மதிப்பிடப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


ஆனால், இதற்கு டயலொக் ஆக்ஸியாட்டாவின் பங்குதாரர்கள் மற்றும் கொழும்பு பங்குச்சந்தை ஆகியவற்றால் இன்னும் அனுமதி பெறப்படவில்லை.


அத்துடன், ஏர்டெல் லங்கா 2023ஆம் நிதியாண்டில் பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த வருவாயில், வெறும் 0.2% பங்களிப்பையே வழங்கியதாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.