Header Ads



ரும்மானாவின் மார்பால் வந்த வரம், மர்ஜானாவின் பிட்டாத்தால் பறிபோனது


முன்னொரு காலம் ஒரு ஊரில் ஒரு கோத்திர தலைவர் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு #ரும்மானா என்ற ஒரு அழகிய செல்ல மகள் இருந்தாள். அவள் சிவப்பாகவும் கவர்ச்சியாகவும்  வாட்டசாட்டமாகவும் இருந்தாள்.  ஒரு நாள் அவள் மார்பை ஒரு தேள் தீண்டிவிட்டது. அவசரமாக அவர் அந்த ஊரிலுள்ள சிறந்த நாட்டு வைத்தியரை  வரவழைக்கும் படி கட்டளையிட்டார். 


வைத்தியர் வந்ததும் #ரும்மானாவின் அழகை கண்டு மயங்கிப்போனார். 'காயப்பட்ட இடத்தை தொட்டு, உறிஞ்சிதான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்றார். சங்கடப்பட்ட தலைவர், வேண்டாம்! வேறு வழிகளில் சிகிச்சை அளிக்கும் படி வேண்டினார். 'இது விஷம் சம்பந்தப்பட்ட விசயம்! விஷத்தை வெளியில் எடுக்க உறிஞ்சுவதை தவிர வேறு வழி இல்லை என்று நாட்டு வைத்தியர் பிடிவாதமாக இருந்தார். 


மகள் மீது கொண்ட அளாதியான பாசத்தாலும் அவளின் உயிர் மீது கொண்ட அக்கறையாலும் பாதி மனதோடு சம்மதித்தார். நாட்டு வைத்தியரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சி வைத்தியம் பார்த்து தனது காரியத்தை சாதித்துக்கொண்டார். 


சில காலத்துக்குப் பின்னர் அதே ஊர் தலைவரின் வீட்டில் பணிபுரியும் #மர்ஜானா என்ற பணிப்பெண்ணை தேள் கடித்துவிட்டது. அது அவளின் பிட்டத்தை பதம் பார்த்திருந்தது. #மர்ஜானா கருத்த, கொழுத்த, அலங்கோலமான உடல் கட்டமைப்பை கொண்டவளாக இருந்தாள். 


உடனே அந்த ஊர் தலைவர் 'எங்கே, #ரும்மானாவுக்கு வைத்தியம் பார்த்த அந்த நாட்டு வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள்' என்று கட்டளையிட்டார். அவர் வந்தவுடன் 'உறிஞ்சல் வைத்தியம் தவிர வேறு வழிகள் இல்லை தானே என தலைவர் மீண்டும் கேட்டார். இந்த முறையும் ரும்மானாதான் கடிகாயத்துக்கு உள்ளானவள் என்று நினைத்துக் கொண்ட நாட்டுவைத்தியர், 'இல்லை, வேறு வழிகள் இல்லவே இல்லை' என்றார். 


அப்போது '#மர்ஜானாவை அழைத்து வாருங்கள்' என்றார் தலைவர். #மர்ஜானாவையும் அவர் கடிகாயம் உள்ள இடத்தையும் நாட்டுவைத்தியர் கண்டதும் அவர் முகம் மாறியது, சிகிச்சை முறையையும் மாற்ற நினைத்தார். 'இல்லை, இதற்கு சிகிச்சை அளிக்க வேறு ஒரு வழியும் உள்ளது 'என்று   வாய்தடுமாறினார். 


கடுப்பாகிய தலைவர் உறையில் இருந்த வாளை எடுத்து உருவினார்.  நாட்டு வைத்தியரின் களுத்தில் வைத்தாவாறு, 'நீ மட்டும் இப்போது #மர்ஜானாவின் பிட்டத்துக்கு உறிஞ்சல் வைத்தியம் பார்க்காவிட்டால் உன் களுத்தை சீவி விடுவேன்' என எச்சரித்தார்.  விழி பிதுங்கிய நாட்டுவைத்தியர் வேறு வழி இல்லாமல் #மர்ஜானாவின் பிட்டத்துக்கும் உரிஞ்சல் வைத்தியம் பார்க்க நிர்பந்திக்கப்பட்டார். 


இச்சம்பவமே காலப்போக்கில் இரட்டை ஆட்டம் ஆடுவோருக்கு எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டப்படுகிறது. 


நீதி:

👉 நாட்டு மக்களின் உரிமைகளையும் பொதுமக்களின் சொத்துக்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்தி உறிஞ்சி குடிப்பவர்கள் கட்டாயம் ஒரு நாள் அவர்கள் விடும் சாபங்களையும் உறிஞ்சி குடிக்க நிர்பந்திக்கப்படுவார்கள். 


👉 தப்பான சுறண்டல்கள் வரமாக தெரிந்தாலும் ஏதோ ஒரு வடிவில் அதுவே சாபமாக மாறிவிடும்.


வரமாக நினைத்து விழுங்கியவை என்றோ ஒரு நாள் வாந்தியாக வெளிவரும்.


👉 #ரும்மானாக்கள் என்றால் ஓடி வரக்கூடியவர்களும் #மர்ஜானாக்கள் என்றால் விரண்டோடக்கூடியவர்களும் எல்லா இடங்களிலும் உள்ளனர், எல்லா துறைகளிலும் உள்ளனர்.


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.