Header Ads



மக்களை பேரழிவுக்குள் தள்ளும் VAT வரி, சட்டமூலத்திற்கு பின் அலரிமாளிகையில் விருந்து நடத்திய அரசாங்கம்


பெறுமதி சேர் வரியை (VAT) 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில், அரசாங்கம் அலரிமாளிகையில் நேற்று இரவு விருந்து நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டியுள்ளார்.


மக்களின் வாழ்க்கையை மேலும் பேரழிவு நிலைக்கு கொண்டு செல்லும் VAT வரி அதிகரிப்பை கொண்டாடும் வகையில் பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

VAT அதிகரிப்புக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் VAT அதிகரிப்பைக் கொண்டாடுவதற்காக விருந்தில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.


“SLPP யின் இந்த இரட்டை நிலை என்ன?” என்றும்  அவர் கேள்tவியெழுப்பினார்.

No comments

Powered by Blogger.