நோர்வே தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்களான தந்தையும், மகளும்
நோர்வே - ஒஸ்லோவில் நடைபெறவுள்ள 2023 மாநகர மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும், மகளும் போட்டியிடவுள்ளனர்.
இலங்கைசையச் சேர்ந்த அனீஸ் ரவூப் மற்றும் அவரது மகளான தமினா செரீப்டின் ரவூப் ஆகியோரே, இவ்வாறு ஒஸ்லோ தேர்தலில் போட்டியிடவுள்ளனனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து, பின்னர் நோர்வேக்கு புலம்பெயர்ந்து, அங்கு அரசாங்க உத்தியோகத்தராக பணியாற்றும் அனீஸ் ரவூப், கன்சர்வேட்டி (வலது சாரி) கட்சி சார்பாக, நோர்வே உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்க உள்ளார்.
அங்குள்ள நோர்வே - ஒஸ்லோ மக்களினதும், இலங்கை முஸ்லிம், தமிழ் சார்பு இயக்கங்கள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களுடனும் சிறந்த உறவைக் கொண்டுள்ள அனீஸ், ஜனாஸா எரிப்பு, முஸ்லிம்களின் விவகாரங்களை ஜெனீவா கொண்டு சென்று அதுகுறித்து விவாதித்தவரும் ஆவார்.
அத்துடன் நோர்வே வலது சாரி கட்சிகளுடனும், அவற்றின் பிரமுகர்களுடனும் நற்புறவை பேணி வருகிறார்.
அதேவேளை 25 வதுடைய தமினா செரீப்டின் ரவூப், ஒரு பட்டதாரி ஆவார். நோர்வே மாநகரத் தேர்தலில் நோர்வே தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கவுள்ளார். தனது 13 வயதிலேயே அக்கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட அவர், படிப்படியாக வளர்ந்து, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தவுடன், நோர்வே தொழிளாளர் கட்சியின் ஆலோசகராகவும் பதவி உயர்த்தப்பட்டார்.
பல்லின, கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழும் ஒஸ்லோ மாநகராட்சியில், தமினா செரீப்டின் ரவூப் அங்கு நன்கு அறியப்பட்டவராக விளங்குகிறார். இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்கள், நோர்வேஜீய இளைஞர், யுவதிகள், இந்திய சீக்கிய, பங்களாதேஸ், பாகிஸ்தான் சமூகங்களினதும் ஆதவை பெற்று விளங்கும் அவர், காலப் போக்கில் ஏனைய சமூகங்களினதும் ஆதரவைப் பெற்று, இத்தேர்தலில் வெற்றியீட்டலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஒரே வீட்டில் வாழும் தந்தையும், மகளும் இவ்வருடம் குடும்பத்தினர் சகிதம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருந்தனர்.
இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாமும் இவர்கள் இருவரினதும் வெற்றிக்காக பிரார்த்திப்போம், எமது வாழ்த்துக்களையும் வழங்குவோம். நோர்வே - ஒஸ்லோவில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள இலங்கையர்கள், இவர்கள் இருவரினதும் வெற்றிக்கு பங்களிப்புச் செய்வோம்.
Post a Comment