Header Ads



இப்போது உண்மையைச் சொல்லுங்கள்...!


ஒருமுறை நான் ஒரு மனநல மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள ​​அதிகாரி ஒருவரிடம்:


இந்த மருத்துவமனைக்கு வருபவர்களை நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என  எந்த அளவுகோலின் அடிப்படையில்  தீர்மானிக்கிறீர்கள்? என கேட்டேன். 


அதற்கு அவர்: நாங்கள் இங்கே ஒரு குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கின்றோம். இங்கு வரும் நோயாளியின் கையில் ஒரு ஸ்பூன், ஒரு கோப்பை மற்றும் ஒரு வாளியை வழங்குவோம். 


பின்னர் தொட்டியில் உள்ள தண்ணீரை இறைக்கும் படி வேண்டுவோம். அவர் எந்த முறையை பயன்படுத்தி குளியல் தொட்டியை காலி செய்கிறார் என்பதைப் பொறுத்து, அவரை மருத்துவமனையில் பொருத்தமான பிரிவில் சேர்ப்போம்' என்றார். 


நானும் ஆர்வக் கோளாறு காரணமாக,  இது மிகவும் எளிமையான பரீட்சைதானே, நாம் வாளியைப் பயன்படுத்தினால் விரைவில் தொட்டியை காலி செய்யலாம்.' என்றேன். 


உடனே அவர் சிரித்தவராக: அப்படி சொல்லதீர்கள்.  உங்களுக்கு மனநல பிரச்சினை இருக்கிறது என்று நினைப்பார்கள்! சாதாரண மனநிலையில் உள்ள ஒருவராக இருந்தால் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள வடிகால் மூடியை திறந்துவிடுவதன் மூலம் தண்ணீரை காலி செய்துவிடுவார்' என்றார். 


பல சமயங்களில் நம் வாழ்விலும் கண்ணுக்கு தென்படும் கடினமான வழிகளை விட, மிகவும் இலகுவான தீர்வுகள் மறைந்திருக்கலாம். சற்று விவேகமாக நோக்க வேண்டியது நம் கடமை. 


இப்போது உண்மையைச் சொல்லுங்கள்!


நீங்களும் முதலில் வாளியால் தானே தண்ணீரை இறைக்க முடிவு செய்தீர்கள்?


எனக்குத் தெரியும்!  நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையி்ல் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான்!

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.