Header Ads



மகிந்தவின் திட்டவட்டமான அறிவிப்பு



மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவர்.


கட்சியுடன் பேசித்தான் கட்சி தொடர்பான நிலைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். எனினும், இதுபோன்ற மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெறும் கட்சி அல்ல. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசும் கூட. மொட்டு ஆட்சி சர்வாதிகார அரசு இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.மக்கள் பக்கம் நின்று நாட்டின் நலன் கருதியே நாம் முடிவுகளை எடுப்போம் எனவும் தெரிவித்துள்

1 comment:

  1. இந்த மஹிந்தவின் திட்டவட்டமான அறிவிப்பு என்பது பச்சப் பொய் அல்லது படுபொய், மஹிந்தவும் ரணிலும் இராப் போசனத்துக்கு ஒன்றாக ஒரே மேசையில் இருந்து கொண்டு அஸிட்டையும் பருகிக் கொண்டு போடும் திட்டங்கள் தான் காலை பகலாகும் போது வர்த்தமானியாக வௌிவருகின்றது. அதனை அப்பட்டமான பொய் எனக்கூறும் மஹிந்த முன்பு ஆற்றியது போலவே தொடர்ந்தும் பொய், புரட்டால் நாட்டைத் தொடர்ந்து கொண்டு செல்லலாம் எனக்கனவு காண்கின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.