Header Ads



நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்த இளநீர் விலை, வெளிநாட்டவருக்கு வேறு விலை


இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



நாட்டின் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேறு வகையான பானங்களை  பயன்படுத்தி வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது மக்கள்  இளநீரை தேடி செல்லும் நிலையில், அதன் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த காலங்களில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்ட இளநீர் விலை தற்போது 200 ரூபாவை தாண்டியுள்ளது.


மேலும் ஒரு இளநீர் வெளிநாட்டவருக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். Twin

No comments

Powered by Blogger.