Header Ads



யாருக்கும் நன்மை செய்வதை, இலகுவாக கருதி விடாதீர்கள் (உண்மைச் சம்பம்)


சமூகப் பணியில் ஈடுபடும் சகோதரரொருவரை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தேன். திருமணம் முடித்து சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு பிறகு ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது என்ற நற்செய்தியை பரிமாறிக் கொண்டார்.


இச்செய்தியை பகிர்ந்துவிட்டு சம்பவமொன்றை நினைவுபடுத்தினார். 


ஒருமுறை மஸ்ஜிதில் தொழுதுவிட்டு வெளியேறும் போது ஒரு வயோதிப தாயும் தந்தையும், 'பசிக்கிறது, உண்பதற்கு உதவுங்கள்' எனக் கேட்டுள்ளனர்.


பக்கெட்டில் இருந்த ஒரு தொகை பணத்தை வழங்கி, 'எனக்காக பிரார்த்தியுங்கள்' என்று கூறியிருக்கிறார். 'என்ன பிரார்த்தனை வேண்டும்' என அவ் வயோதிபர்கள் வினவ, 'நீண்ட காலமாக எமக்கு குழந்தை இல்லை, குழந்தை பாக்கியத்திற்காக பிரார்த்தியுங்கள்' எனக் கூற, 'இன்ஷா அல்லாஹ் ஒரு வருடத்தில் உங்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும்' என்று சொல்லியிருக்கிறார்கள்.


அந்த நிகழ்வு நடந்து அடுத்த வருடம் நண்பருக்கு ஆண் குழந்தை கிடைத்திருக்கிறது. 


ஆனால் இச்சம்பவம் தனது மனதை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அதனை மறக்க முடியாதுள்ளதாகவும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது இமாம் இப்னு கைய்யிம் (றஹ்) வின் இவ்வரிகள் நினைவுக்கு வந்து சென்றன. 


சிலநேரம் நீ தூங்கிக் கொண்டிருப்பாய். 


அவ்வேளையில் நூற்றுக்கணக்கான கரங்கள் வானத்தின் பக்கம் கை உயர்த்தி உனக்காக பிரார்த்திக் கொண்டிருக்கும். 


அது நீ உதவியளித்த ஒரு ஏழையின் கரமாக  


அல்லது


நீ மகிழ்வளித்த மனத்துயரில் மூழ்கியிருந்த மனிதனின் கரமாக


அல்லது


நீ விடிவு தேடிக் கொடுத்த துயரத்திலிருந்த மனிதனின் கரமாக இருக்கலாம்.


ஆகவே யாருக்கும் நன்மை செய்வதை இலகுவாக கருதிவிடாதே!


A W M Basir

14 | 01 | 2023


1 comment:


  1. மேலே கூறப்பட்ட முக்கியமான செய்தியின் மொழிபெயர்ப்பு:
    Once, while leaving the mosque after praying, an elderly mother and father asked, 'I'm hungry, help me eat'.
    He gave some money from his bag and said 'pray for me'. When those old people asked, 'What do you want to pray for', they said, 'We have not had a child for a long time, pray for the blessing of a child', and they said, 'Inshallah you will have a boy in a year.'
    The next year after that event, the friend had a baby boy.
    But he shared with me that this incident has affected his mind deeply and he cannot forget it. Then these lines of Imam Ibn Qayyim (RA) came to mind.
    Sometimes you sleep.
    At that time, hundreds of hands will raise their hands towards the sky and pray for you.
    It is the hand of a poor man whom you have helped
    Or
    As the hand of a man who was engrossed in the spirit you pleased
    Or
    It may be the hand of a distressed man who sought release and had helped
    So don't take it lightly to do good to anyone!

    ReplyDelete

Powered by Blogger.