Header Ads



பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் கூட்டம், கூட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும் - இம்ரான் எம்.பி


கிழக்கு மாகாண சபையில் பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அதிகாரிகள் கூட்;டம்  கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (29) கிழக்கு மாகாண சபை அமைச்சுச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களை உள்ளடக்கிய அதிகாரிகள் கூட்டம் பிரதம செயலாளரினால் அவரது அலுவலகத்தில் கூட்டப்படுள்ளது. இக்கூட்டம் பகல் வரை நீடித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரின் சம்மதத்துடனேயே இக்கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிய வருகின்றது. 


இதனால் தமது தேவைகளுக்காக மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வந்த பொதுமக்கள் உரிய அதிகாரிகளைச் சந்திப்பதற்காக மாலை வரை காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாகவும், மீண்டும் தமது பகுதிகளுக்குச் திரும்பிச் செல்வதில் பல சிரமங்களை  எதிர்நோக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.


திங்கட்கிழமை பொதுமக்கள் தினம் என அரசாங்கத்தினால் பிரகடனப் பட்டடிருப்பதால் அந்த தினத்திலேயே பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வருகின்றனர். இந்தத் தினத்தில் பொதுமக்களைச் சந்திப்பதற்குரிய அதிகாரிகளை வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது.


எனவே, எதிர்காலத்தில் திங்கட்கிழமைகளில் அதிகாரிகள் தமது அலுவலகத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

No comments

Powered by Blogger.