Header Ads



நாளாந்தம் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் இன்றி மூடப்படுகின்றன


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை விடுவிப்பதால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்படுவதாக பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விடுவிப்புக்கான முன்னுரிமைப் பட்டியலின்படி செயற்படுவதாலும், முன்பணம் செலுத்துவதற்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதாலும் இந்த நிலைமை மேலும் மோசமடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் வழங்குவதால் நான்கைந்து மணித்தியாலங்களில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவிடும் நிலைமை காணப்படுவதால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெரும்பாலான நாட்களில் மூடப்படுவதை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மீண்டும்  நீண்ட  வரிசைகளை காணமுடிகின்றது.

No comments

Powered by Blogger.